இந்தியாவில் இந்த மாதம் பொதுத்தேர்தல் ஒன்று நடைபெறவுள்ள நிலையில் உலகத் தமிழ்மக்களின் பார்வை தமிழகத்தின் மீது குவிந்துள்ளது. உலகில் பரந்து வாழும் ஏறத்தாள 10 கோடிக்கு மேற்பட்ட தமிழ் மக்கள் தமக்கென ஒரு நாடு இன்றி வல்லாதிக்க சக்திகளின் திட்டமிட்ட இனஅழிப்பில் சிக்கி அழிவைச் சந்தித்துள்ளனர். இதில் இந்தியாவின் பங்கு முக்கியமானது.

 

தமிழ் இனத்தை அழிக்கும் நோக்கத்துடன் சிறீலங்காவின் உள்விவகாரங்களில் தலையிட்டு சிறீலங்கா அரசை பலப்படுத்திவருகின்றது இந்திய மத்திய அரசு. இந்தியாவின் இந்த நடவடிக்கையே தமிழகத்தின் அரசியலில் உலகத் தமிழ் மக்களின் ஈடுபாட்டை அதிகரித்துள்ளது.

 

தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்த பிறமாநிலங்களை பூர்வீகமாகக் கொண்ட திராவிடக் கட்சிகளின் ஆதிக்கமே தமிழ் இனத்தின் பேரழிவுக்கான காரணம். தமிழக மக்களை ஏமாற்றி திராவிடத்தை புகுத்தியதில் இந்திய புலனாய்வுத்துறையும், கொள்கைவகுப்பாளர்களும் பாரிய வெற்றியை ஈட்டி வந்துள்ளனர். அதனையே முள்ளிவாய்க்கால் பேரவலம் உலகத் தமிழ் இனத்திற்கு உணர்த்தியிருந்தது.

 

எனவே தமிழகத்தில் தமிழ் மக்களின் சுயாட்சியை உறுதிப்பத்தவேண்டிய கட்டாயம் ஒன்று உலகத்தமிழினத்திற்கு ஏற்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளை ஆய்வு செய்தால் திராவிடம் என்ற சாயத்திற்குள் ஒழிந்து தமிழ் என்ற வார்த்தையை தமது கட்சிப் பெயரிலேயே கொண்டிருக்காத கட்சிகளே அதிகம்.

 

சினிமா நடிகர் கமலஹாசனினால் அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட கட்சியில் கூட தமிழை இணைக்க அவர் விரும்பவில்லை. இந்தக் கட்சிகள் தான் தமிழினத்தின் அழிவுக்கான முதன்மையான காரணிகள்.

 

எனினும் முள்ளிவாய்க்கால் பேரழிவின்; பின்னர் விழித்துக்கொண்ட தமிழினத்தின் உந்துசக்தியாக நாம் தமிழர் கட்சி வளர்ச்சி கண்டுவருவது தமிழ் மக்களுக்கு மிகப்பெரும் நம்பிக்கையை கொடுத்துள்ளது.

 

தமிழீழத் தேசியத் தலைவரின் திருவுருவத்தை நெஞ்சில் தாங்கி, கையில் புலிக்கொடி ஏந்தி களம்புகுந்துள்ள நாம் தமிழர் கட்சியின் வெற்றி என்பது தமிழ் இனத்தின் அடையாளத்தின் இருப்புக்கான வெற்றி என்பதை நாம் அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும்.

 

இந்தியப் பிரதமாக மோடி இருந்தாலும், ராகுல் காந்தி இருந்தாலும் தமிழர்கள் தொடர்பான இந்திய மத்திய அரசின் கொள்கைகள் மாறப்போவதில்லை, அதற்கான காரணம் இந்திய கொள்கைவகுப்பாளர்கள் மாறப்போவதில்லை என்பதுடன் அவர்களின் தமிழின விரோதப்போக்கும் மாற்றமடையப்போவதில்லை.

 

ஆனால் இந்திய கொள்கைவகுப்பாளர்களிடம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றால் திராவிடக் கட்சிகளையும், தமது கட்சிகளின் பெயரில் தமிழை உபயோகப்படுத்தக்கூட தயங்கி நிற்கும் கட்சிகளையும் புறம்தள்ளி நாம் தமிழர் என நாம் வீறுகொண்டு எழ வேண்டும்.

 

அதாவது தமிழகத்தில் தமிழ்க் கட்சிகள் பெற்றுக்கொள்ளும் வெற்றியே இந்திய கொள்கை வகுப்பாளர்களுக்கு ஒரு அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பதுடன், இந்தியாவின் கொள்கைகளையும் மாற்றி அமைக்கும்.

 

எனவே இந்த மாதத்தின் நடுப்பகுதியில் இந்தியாவில் இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலில் தமிழகத்தில் நாம் தமிழர் கட்சியின் வெற்றிக்காக உலகத் தமிழினம் ஒன்றுபட்டு உழைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

 

வடதமிழீழத்தின் கடலில் சிங்களக் கடற்படையின் வன்முறைகளை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் தமிழகத்தின் கடற்கரையில் புலிக்கொடி பறக்க வேண்டும். எமது குரல்களை அனைத்துலகம் கேட்கவேண்டும் என்னால் இந்திய நாடாளுமன்றத்தை புலிக்கொடியும், தேசியத் தலைவரின் புகைப்படத்தை தாங்கிய நம் பிள்ளைகள் நிரப்பவேண்டும்.

 

ஓன்றுபடுவோம் நாம் தமிழர் என உரக்க சொல்வோம். தமிழகத்தில் நாம் தமிழர் கட்சியின் வெற்றிக்காக ஒவ்வொரு தமிழ் மக்களும் தமது பங்கை ஆற்றுவோமாக.

 

ஈழம் ஈ நியூஸ்