தமிழர்களின் தனித்துவம் அங்கு அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது – செ.கஜேந்திரன்

0
561

kayanதமிழ்தேசம் அங்கிகரிக்கப்படவேண்டும் அதற்காக தமிழக மக்கள் எழுச்சிகொள்ளவேண்டும் ஈழத்தமிழர்களுக்காக குரல்கொடுக்கவேண்டும் தமிழகம் ஈழத்தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கவேண்டும் அதனை உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம் என அழைப்பு விடுத்துள்ளார் செ.கஜேந்திரன். தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரான அவர் நேற்று தமிழகத்தின் முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற பாலச்சந்திரன் அரங்கில் இறுதிநாள் நிகழ்வான பன்னாட்டவர் அரங்கில் ஆற்றிய உரையினில் மேலும் தெரிவிக்கையினில்:

இந்தியாவின் உண்மையான நட்புசக்தியாக ஈழத்தமிழர்கள் என்றும் இருப்பார்கள்!!! இன்று முள்ளிவாய்க்காலில் போர் நடந்ததா என்று கேட்கும் அளவிற்கு சிறீலங்கா அரசு அந்த இடத்தினை மாற்றிவிட்டார்கள் மறைத்து விட்டார்கள் இன்று தமிழ்மக்களின் மனங்களில் இருந்தும் அதனை அழிப்பதற்கான வேலைத்திட்டத்தினை சிறீலங்கா அரசுமேற்கொண்டு வருகின்றது இருபதிற்கும் மேற்பட்ட நாடுகள் தமிழர்களை அழித்தது அது 2009ற்கு பிறகும் இன்றும் அந்த நாடுகள தமிழ்மக்களை அன்பாகவும் ஆதரவாகவும் தமிழ்மக்களின் தேசியஉணர்வினை அழிப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளார்கள்.

எங்கள் மக்கள் சரியாக இனம் கட்டுகொள்வதில் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளார்கள். தமிழர்களின் பெருமையினை பறைசாற்றுகின்ற இடமாக முள்ளிவாய்க்கால் முற்றம் காணப்படுகின்றது. கடந்த 30 ஆண்டுகளில் பல்வேறு பட்ட காரணங்களினால் பிளவு பட்டிருந்த தமிழர்களை ஒன்றாக்கி ஓரணியில் திரட்டி தமிழன் என்கின்ற உணர்வுடன் தமிழன் என்கின்ற அடையாளத்துடன் தமிழனுக்காக ஒன்றை உருவாக்கவேண்டும் என்கின்ற ஒரு சாதனை ஒன்று நிகழ்தப்பட்டிருக்னின்றது கடந்தகால தவறுகள் எல்லாம் மன்னிக்கப்பட்டு ஓரணியில் அவர்கள் எல்லாம் திரட்டப்பட்டு அந்த முனைப்பு முன்னெடுக்கப்பட்டு வந்தது துரதிஸ்டவசமாக இன்றும் அந்த உயர்ந்த உன்னதமான போராட்டம் நடைபெற்று முடிந்த நிலையில் தமிழர்கள் தனித்துவமான இறைமைகொண்டதேசம் அவர்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு அதற்கான அங்கிகாரம் வேண்டும் என்று பன்னாட்டு சமூகத்திடம் ஒட்டுமொத்த தமிழர்களும் குரல்கொடுத்துக்கொண்டிருக்கின் நேரத்தில் அதற்கும் குழிபறிக்கும் வேலைகள் இன்று தமிழ்சமூகத்தில் இருந்து தமிழ் தரப்புக்களால் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது.

இதனை எல்வோரும் உணர்ந்து கொள்ளவேண்டிய விடயம் இல்லை என்றால் இன்னும் சிலகாலத்தில் ஈழத்தில் தமிழர்கள் வாழ்ந்தார்கள்ள என்று தமிழ்நாட்டில் இடம் அமைக்கவேண்டி வரும் அந்தஅளவிற்கு அங்கு அழிப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது ஈழத்தில் நடந்த அழிவுகள் கொடுமைகள் தமிழ்மக்களின் பெருமைகளை பறைசாற்றுகின்ற ஒருநினைவிடமாக இந்த முள்ளிவாய்க்கால் முற்றம் அமைந்துள்ளது ஆனால் அந்த ஈழமண்ணில் தமிழ்மக்கள் மனங்களில் இருந்து நாங்கள் தனித்துவமான இனம் நாங்கள் ஒருமேன்மைகொண்ட இனம் நாங்கள் சுயநிர்ணய உரிமை கொண்டவர்கள் என்ற எண்ணங்களை இல்லாமல் செய்வதற்கான வேலைத்திட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. ஒற்றைஆட்சி முறையினை தமிழர்கள் அங்கிகரிப்பதான ஏற்பாடு பதவியில் உள்ளவர்களினால் ஆவணம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது 60 ஆண்டுகளின் பின்னர் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

30ஆண்டுகளான ஆயுதப்போராட்டத்திற்கும் தமிழ்மக்களுக்கும் சம்மந்தம் இல்லை என்று சொல்லப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளின் அரசும் செய்த போர்குற்றத்திற்கு சர்வதேச விசாரணை தேவை என்று சொல்லப்பட்டிருக்கின்றது . சொந்தமக்களே இதனை கேட்பதான தோற்றப்பாடு காட்டப்பட்டுள்ளது ஆனால் இனஅழிப்பில் இருந்து தற்காத்துக்கொள்வதற்காககத்தான் தமிழர்கள் ஆயும் ஏந்தினார்கள் என்ற உண்மை மறைக்கப்பட்டுள்ளது. பலஆயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள் அதனை நினைவிற்கொள்ளவேண்டும் ஆனால் நாங்கள் இன்றும் அடிமைகளாக இருக்கின்றோம் படையினரால் தமிழ்மக்களின் பிரதேசங்களைத்தான் ஆக்கிரமிப்பு செய்யமுடிந்ததே தவிர மக்களின் மனங்களை ஆக்கிரமிப்பு செய்யமுடியவில்லை இன்றும் தமிழ்மக்கள் தனித்தேசமாக சிங்களவர்களை ஏற்றுக்கொள்ளாதவர்களாகத்தான் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள் இவற்றை எல்லாம் மாற்றி அமைக்கவேண்டும் என்பதற்காக பலமுயற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது தமிழ்நாட்டில் ஈழத்தமிழர்களின் வரலாற்றினை பேணிபாதுகாக்க வேண்டும் தமிழர்களின் உரிமை போராட்டத்தினை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்லவேண்டும் என்பதற்காக பலபணிகள் முன்னெடுக்கப்படுகின்றன ஆனால் அங்கு இதற்கு எதிரான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது.

இவ்வாறான செயற்பாடுகளுக்குள் தமிழ்மக்களின் உரிமைக்காக நாங்கள் போராடுகின்றோம் அந்த பேராட்டத்தை நாங்கள் ஒருநாளும் கைவிடப்போவதில்லை இந்த இடத்தில் நான் உங்களிடம் கேட்டுக்கொள்வது என்னவென்றால் இன்று இலங்கைத்தீவில் வடக்கு கிழக்கில் தமிழர்கள் தனித்துவமான தேசம் என்பதை இல்லாது அழிப்பதற்கான செயற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது அதற்காக கடலோரம் முழுவதும் சிங்களவர்களை குடியேற்றி அவர்களின் ஆதிக்கத்தினை அதிகரிக்கின்றார்கள் .

விவசாய பொருளாதாரத்திலும் வர்த்தக பொருளாதாரத்திலும் சிங்;களவர்களின் ஆதிக்கம் மேலோங்கிக்கொண்டிருக்கின்றது தமிழர்கள் கூலித்தொழிலாளிகளாக மாறிக்கொண்டிருக்கின்றார்கள். பொருளாதாரரீதியில் தமிழ்மக்கள் தங்கி வாழ்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது இவ்வாறானநிலை தடுத்துநிறுத்தப்படவேண்டும் இல்லையல இன்னும் 5அல்லது 10 ஆண்டுகளில் ஈழத்தில் இருந்து தமிழ்தேசியம் பேசுவதற்கு ஆட்கள் இருக்கபோவதில்லை இதனை நிறுத்தப்படவேண்டும் என்றால் தமிழ்தேசம் அங்கிகரிக்ப்படவேண்டும் அதனை தமிழக மக்கள் அதற்காக அங்கிகாரம் பெற நீங்கள் குரல்கொடுக்கவேண்டும் தமிழகம் தமிழக மக்கள் எழுச்சிகொண்டால்தான் எழுச்சிஅடைந்தால் தான் ஈழத்தமிழர்களின் இருப்பு பாதுகாக்கப்படும் விக்னேஸ்வரன் போன்றவர்கள் சொல்லுகின்றார்கள் .

என்பதற்காக நீங்கள் ஒதுங்கிவிடாதீர்கள் அவர்கள் வேறு சக்திகளின் நிகழ்ச்சி நிரலுக்காக அவ்வாறன கருத்துக்களை சொல்கின்றார்கள் இன்று இந்துசமுத்திரத்தில் ஒருமிகப்பெரிய ஒருபோட்டி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது அது சீனாவின் ஆதிகத்திற்குள் சிறீலங்கா போய்கொண்டிருக்கின்றது அதில் இருந்து சிறீலங்காவினை மீடடெடுக்கவேண்டும் இலங்கையினை மீட்டெடுக்க தமிழ்அரசியலை பயன்படுத்தவேண்டும் அந்த தமிழ்அரசியலை பன்படுத்த தடையாக விடுதலைப்புலிகள் இருந்ததினால் அவர்கள் இந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டிருக்கின்றார்கள் தமிழர்களுக்கு ஒருநன்மையும் இல்லாமல் தமிழர்களை பயன்படுத்தி தமிழர்களுக்கு அழுத்தம் கொடுத்து தங்களுடைய நலன்களை பேணும் நடவடிக்கை நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது அந்த சக்திகளின் அழுத்த கருவியாக மட்டுமே விக்னேஸ்வரனும் அவர்சார்ந்த அமைப்பும் இருக்கின்றது அந்த கட்டமைப்பின் ஒட்டுமொத்த பணியும் அவ்வாறாகத்தான் இருக்கின்றது அதில் உள்ளவர்கள் ஒருசிலர் தேசியவாதிகள் போன்று காட்டிக்கொள்வார்கள் அவர்களை நீங்கள் இனம்காணமுன் அங்கு எல்லாமே முடிந்துவிடும் ஆகவே இந்த ஆபத்தில் இருந்து விடுபட தமிழகம் ஈழத்தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கவேண்டும் அதனை உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம் இந்தியாவின் உண்மையான நட்புசக்தியாக ஈழத்தமிழர்கள் என்றும் இருப்பார்கள் எனத்தெரிவித்தார்.