தமிழர் என்ற உணர்வுடன் 15ம் நாளாக ஐ.நா. நோக்கி தொடருகின்ற நீதிக்கான நடைபயணம்!

0
628

walk1529.01.2014 அன்று நெதர்லாண்ட் நாட்டில் டென் ஹாக் நகரில் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு முன்பாக ஆரம்பமான ஐ.நா. நோக்கி நீதிக்கான நடைபயணமானது 12.02.2014 இன்று பதினைந்தாவது நாளில் ஈகைப்பேரொளி முருகதாசன் அவர்களினது வணக்க நிகழ்வுடனும் எழுச்சிக்கவிதையுடனும் ஆரம்பமாகி 35மஅ தூரத்தை கடந்து லுக்சன்பூர்க் நாட்டில் உள்ள டீசனைநட நகரத்தை வந்தடைந்தது.


மனித நேயப்பணியாளர்கள் உறுதி தளராமல் தாய்மண்ணை மனதில் நிறுத்தி நடைபயணத்தை தொடர்கின்றனர். இன்று யேர்மனி வாழ் தமிழ் உறவுகள் லுக்சன்பூர்க் நாட்டுக்கு சென்று நடைபயணத்தை முன்னெடுக்கின்ற மனித நேயப்பணியாளர்களுக்கு தமது தார்மிக ஆதரவை வழங்கி உபசரித்தார்கள்.


தமிழ் மக்களுடைய செயற்பாடுகள் தமக்கு மகிழ்வையும் புதிய உற்சாகத்தையும் தருவதாக நடைபயணத்தை முன்னெடுக்கும் மனித நேயப்பணியாளர்கள் அறியத்தந்துள்ளார்கள்.


நடந்து செல்லும் பாதையில் ஈழத்தமிழர்களின் இனவழிப்பை வேற்றின மக்களுக்கு எடுத்துரைக்கும் முகமாக நான்கு மொழிகளில் துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டது. மனித நேயப்பணியாளர்களின் செயற்பாடானது வேற்றின மக்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. மேலும் வீடுகளில் உள்ள அஞ்சல் பெட்டிக்குள்ளும் தமிழினவழிப்பு குறித்த துண்டுப்பிரசுரங்கள் போடப்பட்டது.


மேலதிக விபரங்கள் அறியத்தரப்படும்.