ஜப்பான் பிரதமர் தலைமையிலான இராஜதந்திர குழுவினர் இலங்கை விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

குறிப்பாக இலங்கைக்கான ஜப்பானின் விஷேட சமாதான தூதுவர் யசூசி அகாஷி பல தரப்பையும் சந்தித்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று ஐநா விசாரணைக்குழுவிற்கு மாற்றாக மகிந்தவால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் மற்றுமொரு ஆலோசகராக யசூசி அகாஷி நியமிக்கப்படவுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Mahi-akahi
இது நாம் எதிர்பார்த்ததுதான். கடந்த தடவை இவர் கொழும்பு வரும் போதே நாம் இனஅழிப்புக்கு வெள்ளையடிக்கும் நோக்குடனேயே இவரது பயணம் அமைந்துள்ளது என்று எச்சரித்திருந்தோம்.

யார் இந்த யசூசி அகாஷி ?

தமிழின அழிப்புக்கு அனைத்துலக அங்கீகாரத்தை வேண்டி உலகெங்கும் பறந்து திரிந்தவர், தற்போது நடந்த இன அழிப்புக்கு வெள்ளையடிக்கவும் தொடரும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை மறைக்கவும் களமிறங்கியுள்ளார்.

புரிந்துணர்வு உடன்படிக்கையினூடாக தமிழர் சேனைகளை அழித்தொழிக்கும் நயவஞ்சக நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட இணைத்தலைமை நாடுகளின் முக்கியமான அலகாக அப்போது ஜப்பான் விளங்கியது.

அதன் விசேட துதுவராக இந்த யசூசி அகாசி இருந்தார். எமது அழிவிற்கு காரணமானவர்களில் இவரும் ஒருவர்.

Cochairs
புலத்தில் தமிழ்த்தேசிய செயற்பாடுகளை முடக்குதல், புலிகளின் அனைத்துலக ஆயுத மற்றும் அரசியல் கட்டமைப்புக்களை உடைத்தல், தாயகத்தில் புலிகளை மக்களிடம் இருந்து வேறுபடுத்துதல், இறுதியாக புலிகளை படைத்துறைரீதியாக அழித்தொழிப்பு செய்தல் ஆகிய நடவடிக்கைகளை முன்னெடுக்கும் ” புரொஜக்ட பெக்கன்” என்ற தமிழர் தேசத்திற்கு எதிரான அனைத்துலக நகர்வின் சூத்திரதாரிகளில் ஒருவர் இவர்.

மதரீதியான உடன்பாடுகளும் , வியாபார ஒப்பந்தங்களும் சிங்களத்தை ஜப்பானுடன் பிணைத்து வைத்திருக்கிறது. தமிழினத்தை அழிக்கும் நோக்குடன் புரிந்துணர்வு உடன்படிக்கை காலத்தில் களமிறங்கிய மேற்குலகம் தாம் விலகிநிற்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த மேற்படி ஜப்பான் சிங்கள நலன்கள் அடிப்படையில் இந்த யசூசி அகாசியை களம் இறக்கியது.

தற்போது மேற்குலகம் தமது நலன்களுக்காக சிங்களத்தை நெருக்கத் தொடங்கியிருக்கின்றன. ஆனால் சிங்களம் இந்த எதிர்ப்பை எதிர்கொள்ள அல்லது நீர்த்துபோக செய்ய பல காய்களை நகர்த்த தொடங்கியிருக்கிறது.

இந்த இடத்தில்தான் இந்த யசூசி அகாசி முக்கியத்துவம் பெறுகிறார்.

சிங்களத்திற்காக மேற்குலகுடன் சமரசம் பேசக்கூடிய ஒருவராகவும், வியாபார நலன்களுக்காக அனைத்துலக மட்டத்தில் சிங்களத்தை காக்க கூடிய ஒருவாராகவும் இவர் இருக்கிறார்.

புல்மோட்டையிலுள்ள இல்மனைட் தாதுமணல் ஜப்பானுக்கு சமாதான காலத்திலேயே தாரைவார்க்கப்பட்டுவிட்டது. இப்படி நிறைய கதைகள் இருக்கின்றன.

எனவே தமிழர் தரப்பு ஜப்பானின் இந்த தலையீட்டை மிக கவனமாக எதிர்கொள்ள வேண்டும் என்பது மட்டுமல்ல தமிழர் தேசத்தை சுற்றி மிக நுட்பமான ஒரு அனைத்துலக வலைப்பின்னல் பின்னப்படுதையும் இதனூடாகப் புரிந்து கொள்ள வேணடும்.

ஈழம்ஈநியூஸ்.