“தமிழின அழிப்பை கைகட்டி வேடிக்கை பார்த்த உலகம், தாய்லாந்தில் சிறுவர்களை மீட்க மட்டும் வரிசையாக ஓடியது ஏன்?” என்று சில தமிழர்கள் ஆற்றாமையும், வன்மமுமாக எழுதிய பதிவுகள் காணக் கிடைக்கின்றன.

இந்த கோபமும் அதன் பின்னுள்ள கேள்விகளும் நியாயமானதே..

 

ஆனாலும் இரு நிகழ்வுகளுக்கும் இடையில் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன.

 

உலகின் கூட்டு மனச்சாட்சியை மூலதனமாக்கி அதன் மீது ஒரு சாகசம் நிகழ்த்தக் கூடிய வாய்ப்பை உலக ஊடகங்கள் பயன்படுத்திய லொபி “தாய்லாந்து சிறுவர்களின்’ பின்னணியில் இருந்ததே அது முக்கியத்துவம் பெற முதன்மைக் காரணமாகும்.

 

அதே மலையிடுக்குகளில் ஒரு தேசிய இனம் சிக்குண்டிருந்தால் அந்த பிராந்திய அரசியலின் முக்கியத்துவம்தான் அவர்களது ‘மீட்பை’ தீர்மானித்திருக்கும்.

 

இன்றைய பயங்கரவாத அரச உலக ஒழுங்கிற்கு முரணான ஒரு இருப்புக்குரியவர்களாக அந்த இனக் குழுமம் திகழ்ந்தால் அந்த மலையிடுக்குகளில் அவர்கள் அப்படியே விடப்பட்டிருப்பார்கள் – முள்ளிவாய்க்காலில் நாம் விடப்பட்டது போலவே..

 

இந்த இடத்தில்தான் நந்திக்கடல் முக்கியத்துவம் பெறுகிறது.

 

நந்திக்கடல் இராணுவ, அரசியல் பின் புலத்தில் நின்று கோட்பாடுகளை முன்வைத்தாலும் அதன் மைய உள்ளடக்கம் உலகளாவிய அளவில் மனித மான்பியங்களையும், மனித விழுமியங்களையும் கட்டிக் காப்பதுதான்.

 

எனவே தாய் சிறுவர்களை மீட்ட மனித நேயத்தை நாம் போற்றுவோம் – அதைக் கட்டிக் காப்போம். அது மட்டுமல்ல சுய லாப அரசியலின் வழி நின்று ஒரு இனத்தை – ஒரு குழுமத்தை காவு வாங்கும் அல்லது காக்கும் நவீன உலக ஒழுங்கை நிர்மூலம் செய்ய உலகளவில் ஒன்றுபடுவோம்.

 

அதற்குத்தான் நந்திக்கடல் அறைகூவல் விடுக்கிறது.

 

பரணி கிருஸ்ணரஜனி