சுனாமி தாக்கிய பிறகு, தமிழீழ அரசு உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளையும், கடற்கரையில் நிகழ்ந்த சேதங்களையும் சரி செய்தது. தமிழகத்தினை விட கடுமையாக தாக்கப்பட்ட பகுதி தமிழீழம்.

இந்தோனேசியாவிற்கு அடுத்து சுனாமியின் நேரடி ஆக்ரோசத்திற்கு ஆட்பட்ட பகுதி தமிழீழ தன்னாட்சி பிரதேசம். இலங்கை அரசின் கட்டுமானத்தினை விட வலிமை குறைந்த கட்டுமானத்தினை வைத்துக்கொண்டு தமிழீழ அரசு மிகச்சிறந்த பணியை செய்தது. சுனாமி தாக்கியபிறகு ஏற்படும் கட்டுமான சிதைப்பானது, மருத்துவ-உணவு உதவிகளை கொண்டு செல்வதற்கு ஏற்றதாக இருக்காது.

tusnami
மக்களை-கிராமங்களை-காயம்பட்டவர்களை சென்று சந்தித்து மீட்காவிடில் , இறந்த உடல்களில் இருந்து வெளியாகும் கிருமிகள்/நோய்கள் தொற்று நோயாக பரவி மேலும் பல அழிப்புகளை கொண்டுவரும். மேலும் தூய்மையற்ற தண்ணீரை குடிப்பதன் மூலமும் தொற்று நோய்கள் பரவும் என்பதால் சுத்தமான நீரை பாதிக்கப்பட்ட கடற்கரை பகுதிக்கு கொண்டு சேர்த்தல் அவசியம். தொடர்ந்து உணவு கொடுத்தல், தங்கவைத்தல், உடைகளை கொடுத்தல் என அனைத்து உதவிகளும் 24 மணி நேரத்திற்குள் கொண்டு செலுத்தப்பட வேண்டும்.

இதை ஒரு அரசாங்கமே செய்து முடிக்கும் தன்மையுடன் , தயாரிப்புடன் இருக்குமா எனச் சொல்ல இயலாது. தமிழகத்தில் மூன்று-நான்கு நாட்களுக்கு பின்னர் இறந்த உடல்களை கண்டறிந்த நிகழ்வுகளை நாம் அறிவோம். இப்படியாக முழுமையடைந்த அரசால் அல்லது வளர்ச்சியடைந்த நாடுகளால் செய்யப்படும் செயலை அர்ப்பணிப்புடன் செய்வது என்பது விடுதலைப் போராளிகளால் மட்டுமே சாத்தியமாகும்.

மேலும் சர்வதேச தரத்தில் சுனாமி எச்சரிக்கை கருவி, நிலத்தில் பொருத்தப்பட்டு உலகின் பிற பகுதிகளுடன் இணைக்கப்பட்ட தொழில்நுட்பத்துடன் கிளிநொச்சியில் அலுவலகம் பொருத்தப்பட்டதாக புலம்பெயர் நண்பர்கள் பகிர்ந்திருந்தார்கள். இதுபோன்ற வசதி இந்தியாவிலேயே அத்தருணத்தில் உருவாக்கப்படவில்லை. இன்றும் இருக்கிறதா எனத் தெரியவில்லை.

தமிழீழ அரசு, இலங்கை அரசினை விட வேகமாகவும், அக்கரையுடனும் செயல்பட்டது. இலங்கை அரசு சர்வதேசத்தினால் கொடுக்கப்பட்ட உதவிப் பொருட்களை தமிழர் பகுதிகளுக்கு அனுப்பவோ, பகிர்ந்து கொள்ளவோ இல்லை. இதை பல்வேறு தொண்டு நிறுவனங்களே பதிவு செய்தது. இதைப்பற்றி பிபிசி, லட்சுமண் கதிர்காமரிடம் பேட்டி கண்டபொழுது நேரடியாக சரியான பதிலளிக்காமல் நழுவினார்.

ஆனால் தமிழீழ அரசு இலங்கை ராணுவத்தின் கட்டுபாட்டு பகுதியில் இருந்த பகுதிகளுக்கு சென்று கவனித்தனர்.
தமிழீழ அரசு நடத்தப்பட்ட முறைமைகளைப் பற்றி பல்வேறு ஆவணப்படுத்தல் தேவைப்படுகிறது. ஏனெனில் தமிழர்கள் எப்படியான அரசினை நடத்தினார்கள் என்பதையும், ஒன்றுபட்ட இலங்கையில் அரசு நடத்தப்படும் விதத்தினையும் சர்வதேசத்திடம் சொல்லவேண்டியது காலத்தின் தேவை.

பி.பி.சியில் கதிர்காமரின் பேட்டி,

“Sri Lanka suffered the second highest number of casualties in the Indian Ocean tsunami. Thirty thousand people died and one million were left homeless. Three months on, what is the state of affairs in a country already ravaged by the effects of thirty years of civil war? The tsunami disaster was seen as an opportunity to re-start stalled peace talks but it seems to have only heightened tensions, with accusations the government is deliberately withholding aid from going to controlled areas. HARDtalk spoke with Sri Lanka’s Foreign Minister about reconstruction efforts and the tense situation between the government and the LTTE, Tamil Tiger rebel group.”

tsunami5
“BBC: What is the government’s response to the accusation that aid is being withheld from Tamil Tiger areas?
Kadirgamar. Totally and horribly false – this is being put about by mischief makers and propagandists.. Take the food situation in the first two months. Earlier on there were accusations that people in the Tamil areas were starving and had no water – that was a load of rubbish..”

BBC: It is not only Tamil Tigers who are saying this. Local NGOs are saying it. Western Aid organisations.. Let me tell you what John Charly from Refugees International said – he says that the Government when faced with the choice of spending foreign aid in Galle in the south or in Tamil areas in the North and East, the government would give it in Galle where its Sinhala constituencies are based

Kadirgamar: That is a wholly unsubstantiated allegation.

BBC: This is not a Tiger rebel saying it, is it

Kadirgamar: I do not know who he is

BBC: He is a western NGO. He is one of many NGOs who is saying that this government is withholding aid to Tamil Tiger areas

Kadirgamar: I am sorry – that does not impress me in the slightest….

நன்றி: திருமுருகன் காந்தி.