தமிழீழ தேசியத் தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு தபால்த்தலை

0
686

praba-kidsதமிழீழ தேசியத் தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு வல்வெட்டித்துறையைச் சேர்ந்த சுரேஷ்கண்ணன் அவர்களால் பின்லாந்தில்… பின்லாந்து அரசு ஊடாக முதல்தரமான (first class) தபால்த்தலை வெளியிட்டு பெருமையும், சிறப்பையும் சேர்த்துள்ளார்.

இவர் கடந்த வருடமே பல தடவைகள் இதே போன்ற தபால்த் தலை வெளியிட பல தரப்பட்ட முயற்சிகள் எடுத்த போதிலும், அந்த நாடு நிராகரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இருந்தாலும் வெளியிட்டே தீர வேண்டும் என்ற வெறியுடன் பல கடினமான முயற்சிகளோடு பின்லாந்து அரசினை நாடி இது பற்றிப் பேசி சம்மதிக்க வைத்து தமிழர்களின் விடிவிற்காகப் போராடிய வீரத்தலைவன் என்ற அடிப்படையில் தமிழீழ தேசியத் தலைவர், அவர் குடும்பத்துடன் இருக்கின்ற படத்தினை தபால் தலை ஊடாக வெளியிட்டு தமிழர்களின் வீரப் போராட்டத்தையும், தமிழர்களின் ஒரே தலைவன் பிரபாகரன் என்பதையும் இத்தபால் தலை ஊடாக சொல்லிச் சிறப்பித்திருக்கிறார்.

பின்லாந்து அரசும், தேசியத் தலைவரின் வரலாற்றுச் சிறப்புக்களை ஏற்று முதல் தரமான (first class) தபால் தலை வெளியிட்டு எங்கள் தேசியத் தலைவரையும் அவரின் குடும்பத்தையும் கௌரவப்படுத்தியுள்ளது.

கடந்த வருடங்களில் தமிழீழச் சின்னங்கள் பதிக்கப்பட்ட தபால் தலைகள் பிரான்ஸ், பிரித்தானியா, அமெரிக்கா, நோர்வே, ஜேர்மனி ஆகிய நாடுகளில் அந்த நாட்டு அரசாங்கங்கள் ஊடாக ஈழத்தமிழர்கள் வெளியிட்டு சிறப்பித்து கௌரவப்படுத்தியிருந்தது யாவரும் அறிந்ததே…

இதே வரிசையில் இப்போது முதன் முறையாக ஈழத்தமிழர்கள் அரிதாக வாழும் பின்லாந்தில் வாழ்ந்து கல்வி கற்று வருகின்ற வல்வெட்டித்துறையைச் சேர்ந்த சுரேஷ்கண்ணன் அவர்களால் அந்த நாட்டு அரசு ஊடாக மேற்குறிப்பிட்ட தபால் தலையை வெளியிட்டு தமிழர்களின் ஒரே தலைவன் தேசியத் தலைவர் பிரபாகரன் என்பதை உலகிற்கு உரக்கச் சொல்லி கௌரவப் படுத்தியுள்ளார்.