சிறீலங்கா அரசின் இனஅழிப்புக்கு எதிராக போராடி தமது இன்னுயிர்களைத்துறந்த மாவீரர்களை நினைவுகூர்ந்து அவுஸ்திரேலியாவின் பசுமைக்கட்சியைச் சேர்ந்த செனற்றர் லீ றியனன் அவுஸ்த்திரேலியா நாடாளுமன்றத்தில் நேற்று (26) உரையாற்றியுள்ளார்.

lee_Aus
சிறீலங்கா அரசின் 60 வருடகால தமிழினத்திற்கு எதிரான அடக்குமுறைகளுக்கு எதிராக 26 வருடங்களாக இடம்பெற்ற ஆயுதப்போரில் பல ஆயிரம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

அவர்களை நினைவுகூரும் வாரம் இது. கடந்த வருடம் சிட்னியில் இடம்பெற்ற நிகழ்வில் நான் பங்குபற்றியிருந்தேன். 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற போரின் வலிகளை தமிழ் மக்கள் இன்னும் மறக்கவில்லை. ஓரு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதுடன், பல நூறு தமிழ் பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டனர்.

இந்த வருடம் நான் நாடாளுமன்றத்தில் உள்ளேன், ஆனால் எனது நினைவுகளும், இதயமும் சிறீலங்காவில் உள்ள தமிழ் மக்களின் துயரத்துடன் பிணைந்துள்ளது. சிறீலங்காவில் இருந்து தப்பிய பல தமிழ் மக்கள் உலக நாடுகளில் அரசியல் தஞ்சம் அடைந்துள்ளனர்.

தமிழ் மக்கள் தமது சுதந்திரத்திற்காகவும், தமக்கு இழைக்கப்பட்ட குற்றங்களுக்கான நீதிக்காகவும் காத்திருக்கின்றனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அந்த உரையின் இணைப்பை பார்க்க இங்கு அழுத்தவும்.