தமிழ்நாட்டு சொந்தங்கள் ஜெயலலிதா தலைமையிலான à®….தி.மு.க இற்கு வாக்களிக்க வேண்டும் – ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு

0
609

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஈழத்தமிழர் பற்றி அதிக அக்கறை உள்ளவர், எனவே எம் தமிழ்நாட்டு சொந்தங்கள் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க இற்கு வாக்களிக்க வேண்டும் என்று ஒபாமா தமிழர்கள் அன்புடன் கேட்டுகொள்கிரர்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா, அவரது கட்சி அ.தி.மு.க சார்பில் பிரச்சாரம் செய்கின்றார். அவர் கடந்தகாலங்களில் ஈழத்தமிழர்கள் விடையத்தில் மேற்கொண்ட தைரியமான முடிவுகள் மக்கள் இதயங்களில் அவருக்கொரு நல்ல இடத்தினைக் கொடுத்துள்ளது. அவருக்கு ஆதரவளிப்பதே தமிழ்ச் சொந்தங்களின் சரியான தெரிவாக இருக்கும். எமது தமிழகத்து தமிழ் உறவுகள் ஜெயலலிதா அவர்களுக்கு தமது முழு ஆதரவினை வழங்கி வெற்றியடைய வைக்கவேண்டும் என்று ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு வேண்டிகொள்கின்றது.

jeya-perari
ஜெயலலிதா அவர்கள், மத்திய அரசாங்கதின் ஆட்சியில் இருந்து காங்கிரஸ் அரசை முற்றாக அகற்றவேண்டும் என்று தொடர்ந்து கூறிவருவதோடு ஈழத்தமிழர்களுக்கு ஆதராவாக பல நடவடிக்கைகளை துணிந்து மேற்கொள்ளுகின்றார். இவற்றினால் காங்கிரஸ் அரசினால், ஆட்சியில் இருந்து கூட அகற்றக்கூடிய நிலை தோன்றலாம்; என்பதையெல்லாம் பொருட்படுத்தாமல் செயற்படுகின்றார். அவரது இறுக்கமான கொள்கையும் இலங்கை அரசாங்கத்திற்கெதிராக பொருளாதாரத் தடை கொண்டுவருதல், மற்றும் இலங்கையின் வடகிழக்கு மாகாணத்தில், பிரிந்து போதலுக்கான பொதுவாக்கெடுப்பு நடத்துதல் மற்றும் இந்தியாவின் நட்பு நாடு இலங்கை என்ற கொள்கையை எதிர்ப்பது போன்ற முடிவுகளையும் எடுத்தார். இவற்றினை எல்லாம் ஆளும் காங்கிரஸ் கட்சியினர் எதிர்த்தார்கள். ஆனால் ஜெயலலிதா அவர்கள் தான் எடுத்த முடிவில் தெழிவாக நின்றார்.

தற்போது இந்தியாவில் நடைபெறஉள்ள பொதுத்தேர்தல் ஆனது அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்தியாவை யார் ஆட்சிபீடம் ஏறப்போகின்றார்கள் என்பதைத் தீர்மானிக்கப்போகின்றது. அது ஜெயலலிதா அவர்களின் தலைமையில் கூட அமையலாம். எனவே அனைத்து எமது தமிழ் உறவுகளும் அவருக்கு ஆதரவு நல்லக வேண்டும் என்று ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு வேண்டுகோள் விடுக்கின்றது.