தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் – அமெரிக்க தூதரிடம் மாணவர்கள் மனு

0
598

US-embasy-chennaiவருகிற மார்ச் மாதம் இலங்கைக்கு எதிராக அமெரிக்க கொண்டுவரும் தீர்மானத்தில் தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று சென்னையில் அமெரிக்க தூதரை சந்தித்து மாணவர்கள் மனு ஒன்றை கையளித்துள்ளனர்.

அமெரிக்க தூதரிடம் மாணவர்கள் மனு:-

1.இலங்கையில் நடந்தது இனப்படுகொலை. தமிழர்களுக்கு சுதந்திரமான சர்வதேச இனபடுகொலைக்கான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

2.தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.

3.கடந்தமுறை போல வெற்று தீர்மானமாக இல்லாமல், தனி ஈழத்திற்கான தீர்வு கொடுக்கும் வகையில் அமெரிக்காவின் தீர்மானம் அமைய வேண்டும்.

4.கடந்த முறை போல இந்த முறையும் இந்தியா தீர்மானத்தை நீர்த்து போக வைக்க அனைத்து முயற்சியையும் செய்யும். தீர்மானத்தில் மற்ற நாடுகளின் தலையீடு இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து இன்று சென்னையில் அமெரிக்க தூதரை சந்தித்து மாணவர்கள் மனு ஒன்றை கையளித்துள்ளனர்.

நமது கோரிக்கையை மேல் அதிகாரிகளிடம் தெரியபடுத்தபடுவதாகவும் கண்டிப்பாக இந்த முறை தமிழர்களுக்கு ஆதரவான வலுவான தீர்மானத்தை கொண்டு வருவோம் எனவும் உறுதியளித்ததாக மாணவர்கள் தொவித்துள்ளனர்.