தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வடசென்னை பகுதியில் குருதிகொடை முகாம்

0
671

tn-blood-9தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வடசென்னை மேற்கு மாவட்டம் கொளத்தூர் பகுதியில் நாம்தமிழர் கட்சியின் தலைமையில் குருதிகொடை முகாம் நடந்தது. மேலும் வந்தவர்களுக்கு பரிசாக மரக்கன்று கொடுக்கப்பட்டது. ஊர்திகளுக்கு இலவசமாக தமிழில் எண்பலகை மாற்றப்பட்டது.

இதில் நூற்று கணக்கில் பொதுமக்கள் சராசரி இடைவெளிகளில் குருதி கொடை அளிக்க ஆர்வம் காட்டினர். அதில் உடல் பரிசோதனைக்கு பிறகு பலர் தேர்வாகி குருதிகொடை அளித்தனர்.
காலை 11.15 முதல் நண்பகல் 2.30 மணி வரை நிகழ்ச்சி நடைபெற்றது. நேரமின்மையால் ஆர்வமுடன் வந்த பலருக்கு பலனிலாமல் போனது.
tn-blood
இதனிடையே, திருவள்ளூர் நடுவண் மாவட்ட இளைஞர் பாசறை சார்பாக தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்றுக்கொண்டிருக்கும் மாபெரும் எழுவர் கால்பந்து விளையாட்டு போட்டி இன்று தொடங்கியது.

தமிழர் முன்னேற்றக் கழகத்தின் மாவீரர் தின பொதுக்கூட்டம் சென்னை அயனம்பாக்கம் மூன்று சிலை அருகில வரும் 27.11.13 புதன் கிழமை மாலை 5.00 மணிக்கு நடக்க இருக்கிறது.
தோழர்கள் தங்கள் குடும்பம் சகிதமாய் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.tn-spots