வீட்டை சுத்தம் செய்யும் நேரம் வந்துவிட்டதாக தெரிவித்த தமிழரசுக் கட்சியின் மகளிர் அணிச் செயலாளர் விமலேஸ்வரி ஸ்ரீகாந்தறூபன் தமிழ் தேசியத்துக்கு எதிராக செயற்பட முனையும் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கு தமிழ் மக்கள் பாடம்புகட்டுவார்கள் என்றும் தெரிவித்தார்.

நேற்று யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்;திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் தேசியம் பேசி கடந்த காலத்தில் தமிழரசுக்கட்சி ஊடாக பாராளுமன்ற சென்ற முன்னாள் பாராளுன்ற உறுப்பினர் சிறீதரன் இன்று தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்தை கொச்சைப்படுத்தும் அநாகரிக ஒப்பீட்டு அரசியலை நடத்த முனைவதன் ஊடாக இளைய சமூகத்தின் மத்தியில் பிழையான வரலாறுகளை திணிக்க முயல்கின்றார்.

தமிழ் தேசிய அரசியலுக்குள் ஆரம்பத்தில் சிறீதரன் அறிமுகமானபோது தமிழ் பெண்கள் அவரை உயர்ந்த இடத்தில் வைத்து நோக்கினார்கள். ஆனால் இன்று அவரது தமிழ் தேசியத்துகெதிரான செயற்பாடுகள் தமிழ் பெண்கள் மத்தியில் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது.

தமிழரசு கட்சியின் அடுத்த தலைமை பெறுப்பிற்கு சிறிதரன் நியமிக்கப்படப் போவதாக வெளியாகியுள்ள தகவல்கள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் அவரிடத்தில் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அவர்:-

உண்மையில் இது காற்றுவழி வந்த பேச்சாகும். இது அவர்களாகவே தங்களுக்கு எடுத்த ஒரு முடிவாகும். எல்லோருக்கும் ஆசை உள்ளது. எனக்கும் ஜனாதிபதியாக வர வேண்டும் என்ற ஆசை இருக்கலாம் என்று நான் நினைக்கலாம். அது எனது நினைப்பாக மட்டுமே இருக்கும்.

சிறிதரனின் அந்த நினைப்புத்தான் இப்போது அவருடைய பிழைப்பை கெடுக்கப் போகின்றது.

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் தொடர்பில் அண்மையில் சிறிதரனால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் ஈழத்தமிழர்கள் மத்தியிலும், புலம்பெயர் மக்கள் மத்தியிலும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதை எந்த வகையில் நீங்கள் நோக்குகின்றீர்கள் என்ற ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர்:-

பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தமிழரசு கட்சி ஊடாக அரசியலுக்குள் பிரவேசித்த போது, தமிழ் தேசிய விடுதலையின் ஒரு உருவமாகவே தமிழ் பெண்களால் நோக்கப்பட்டார்.

ஆனால் இன்று அவரின் தமிழ் தேசியத்திற்கு எதிரான செயற்பாடுகளும், கருத்துக்களும் தமிழ் மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதே வேளை தமிழ் தேசியம் தொடர்பில் பேசுவதற்கு எந்த அருகதையும் அற்றவராக இன்று சிறிதரன் நோக்கப்படும் அளவிற்கு அவருடைய செயற்பாடுகள் அனாகரிகமாக மாறியிருக்கின்றது.

இதற்கான அறுவடையை இம்முறை தேர்தலில் தமிழ் மக்கள் அவருக்கு வழங்குவார்கள் என்று தெரிவித்த அவர், தமிழ் தேசிய அரசியலில் இருந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சி.சிறிதரன் ஆகியோர் அகற்றப்பட வேண்டியவர்கள் என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here