தமிழ் மக்களுக்கு எதிராக சிறீலங்கா இராணுவத்தை பலப்படுத்திய அமெரிக்கா

0
555

usa-states-arrive_nஇறுதிக்கட்ட போரில் இலங்கை ராணுவத்தினருடன் அமெரிக்க ராணுவத்தினர் தினமும் போர் பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தனர் என்று திடுக்கிடும் சாட்சியம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரோம் நகரை தளமாகக் கொண்ட மக்கள் தீர்ப்பாயத்தில் தற்போது இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கப்பட்ட போரில் நடைபெற்ற சம்பவங்கள் பற்றி சாட்சியம் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது, அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் நிலைப்பாடு குறித்து சாட்சிகள் பதிவு செய்யப்பட்டன.

மக்கள் தீர்ப்பாயத்தில் திங்களன்று நடைபெற்ற விசாரணையின் போது, “வானவில்” என்ற அர்த்தத்தைக் கொண்ட தேதுன்ன சிங்கள செய்திதாளின் ஆசிரியர் ரோஹித்த பாஷன சாட்சியம் அளித்தார்.

அப்போது இலங்கையின் இறுதிப்போரின் போது அமெரிக்காவின் தொடர்பு இருந்ததாக குற்றம் சுமத்தினார். இலங்கை ராணுவத்தினருடன் அமெரிக்க ராணுவத்தினர் தினமும் போர் பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தனர். இதன் மூலம், இலங்கை ராணுவத்தினருக்கு உரிய பயிற்சிகள் அளிக்கப்பட்டதாகவும் ரோகித்த பாஷன சுட்டிக்காட்டினார்.

விடுதலைப்புலிகளின் வழங்கல் பதையை முடக்குவதில் முக்கிய பங்குவகித்த அமெரிக்கா சிறீலங்கா இராணுவத்தை களமுனையிலும் பலப்படுத்திய நடவடிக்கை தற்போது வெளிவந்துள்ளது.

விடுதலைப்புலிகள் பலமான சிறீலங்கா படையினரை சந்திக்க நேரும் என போர் ஆரம்பமாகிய 2006 ஆம் ஆண்டு காலப்பகுதியில், சிறீலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் தமிழ் மக்களை எச்சரித்திருந்ததும் நாம் இங்கு நினைவில் கொள்ளத்தக்கது.

SLA-23
கொடையாளி நாடுகள் என்ற போர்வையில் யப்பானின் உதவியுடன் உள்நுளைந்த மேற்குலகம் தமிழ் மக்களின் படைபலத்தை அழித்து சிறீலங்கா இராணுவத்தின் போர்க்குற்றங்களுக்கு உதவிய நடவடிக்கைகள் தமிழ் மக்களின் மனங்களில் அதிக வேதனையை தோற்றுவித்துள்ளது.

மக்கள் தீர்ப்பாயத்தில் நேற்று விசாரணைகள் முடிவடைந்த நிலையில், இன்று சர்வதேச மனித உரிமை தினத்தன்று தீர்ப்பு வெளியிடப்படுகிறது. இந்த தீர்ப்பை 10 நீதிபதிகள் கொண்ட அமர்வு அளிக்க உள்ளது.

சிறீலங்காவில் இடம்பெற்றுவருவது ஒரு இனப்படுகொலை என இந்த தீர்ப்பாயத்தில் தீர்ப்பு வழங்கப்படவேண்டும், அவ்வாறு வழங்கப்பட்டால் சிறீலங்கா அரசு தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளும் இனஅழிப்பு அனைத்துலக மட்டத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்படும்.

இவ்வாறான ஒரு நிலை உருவாகினால், சிறீலங்கா மேற்கொண்ட போர்க்குற்றங்களுக்கான அனைத்துலக விசாரணை மற்றும் நீதி என்பவற்றுடன், தமிழ் மக்களின் உரிமைகளைப் பெறுதல் மற்றும் தமிழ் இனத்தை காப்பாற்றும் நடவடிக்கைகளின் அடுத்த அரசியல் நகர்வை மேற்கொள்ள முடியும். ஒரு இனப்படுகொலை நிகழும் நாட்டில் தான் அதில் பாதிக்கப்படும் மக்கள் பிரிந்து செல்வதற்கான வாக்கெடுப்பை கோருவது அனுகூலமானது.