தற்போது எங்கள் வேலை ஐ.நா மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் தீர்மானத்தை பாதுகாப்பதே

0
612

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கையில் நடந்த இன யுத்தத்தின் போது இலங்கையின் நடவடிக்கைகளை ஐநா மனித உரிமைகள் உயர் ஆணையருரினது அலுவலகம் விசாரணை செய்ய வேண்டும் என்று கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த முடிவு மிகவும் நல்லது. நாம் அதை பல ஆண்டுகளாக ஆதரித்து வருவதுடன் எதிர்பாத்தும் இருந்தோம் .

இப்போது, எங்கள் பணி இந்த தீர்மானத்தை ஆதரித்து நிற்பதே. இந்த தீர்மானத்தை பாதுகாப்பதும் எங்களுக்கு ஒரு முக்கியமான பணி ஆகும்.

சில மூன்றாம் கட்சிகள் இந்த ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை வலுவிழக்க செய்ய சில முயற்சிகளை மேற்கொள்ளுவார்கள். இந்த முயற்சிகளில் ஒன்றாக இலங்கை அரசாங்கத்துடன் தமிழர்களை பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்துவார்கள் அல்லது ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை நீர்த்துப்போக முயற்சி செய்வார்கள்.. நாம் பொறுமையுடன் இந்த முயற்சிகளை தடுக்க வேண்டும் .

UN-resolution
எங்கள் நிலைமையும் தென் சூடான் நிலைமையும் ஒரே மாதிரியானவை. சூடான் மத்திய அரசு இனப்படுகொலை என்று சொல்லகூடிய கொள்கைகளை கடைப்பிடிதத்தது என சர்வதேச விசாரணை மூலம் நிரூபிக்கப்பட்டது.. இது வடக்கில் வாழும் அரபு மக்களுக்கும் தெற்கில் வாழும் ஆபிரிக்க மக்களும் ஒன்றாக வாழ முடியாது என்று சர்வதேச விசாரணை மூலம் நிறுவப்பட்டது, இதனால் ஒரு பொது வாக்கெடுப்பு எடுத்து அதில் தென் சூடான் மக்கள் தாம் சூடான் இலிருந்து பிரிந்து வாழ விரும்பி 99% வாக்குகளை வழங்கினார்கள்.

இந்த நேரத்தில் நாமும் ஒவ்வொரு படியினனையும் கவனமாக எடுக்க வேண்டும் . நமது அடுத்த படி சூடான் அரசாங்கம் செய்தது போல் சிறிலங்கா அரசாங்கமும் தமிழருக்கு இனப்படுகொலை என்ற அளவு கொள்கைகளை கடைப்பிடித்து வருகிறது என்று உலகம் முழுவதும் நிரூபிக்கக் கூடியவாறு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் தீர்மானமத்தை இனப்படுகொலை திசையில் நகர்த்த வேண்டும் . எனவே நாம் இதை ஆதரிப்பது மட்டும்மன்றி யாரும் இதன் வழியில் தடைகள் வைக்காமல் உள்ளதை உறுதி செய்ய வேண்டும்.

இந்த நிலையை அடைய ஆறு தசாப்தங்களுக்கு மேலாக கடுமையாக உழைத்தும் எதிர்பார்த்தும் வருகிறோம். எனவே நாம் கவனமின்மை மூலம் இந்த தரணத்தை இழக்க கூடாது .

நன்றி

ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு