தேரவாட சிங்கள பௌத்தம் குறித்து தமிழகத்திற்கு இன்னும் புரிதல் தேவை

0
645

buddha09இலங்கைத் தீவில் தேரவாட சிங்கள-பௌத்த நிறுவனங்கள் ஈழத் தமிழர் மீதும் இன்னபிற பௌத்தரல்லாதோர் மீதும் நடத்திய இனப்படுகொலை பேரவலத்தை வரவேற்கப்பட வேண்டிய “நாகரிக-பொறிமுறையாக” சில குறிப்பிட்ட நாடுகளில் உள்ள குறிப்பிட்ட சிலரால் மீண்டும் மீண்டும் முன்வைக்கப்படுகிறது. இதற்கு அப்பாவித்தனமோ அல்லது அறியாமையாமையோ காரணம் அல்ல. இவற்றில் பெரும்பாலான நாடுகளின் நிறுவனங்கள் டோக்கியோ இணை-தலைமைகள் (அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் மற்றும் நோர்வே) மூலமாகவோ, அமெரிக்காவின் லாவணிக்கூட்டத்தில் இணைந்ததன் மூலமாகவோ நடத்தப்பட்ட இனப்படுகொலைப் போருக்கு உடந்தையாக இருந்துள்ளன. வேறு சிலர் குறிப்பாக தென்கீழை ஆசியாவில் சிங்கள-பௌத்தத்தை முன்மாதிரியாகக் கருதுகின்றனர். அவற்றுள் மிக மோசமான பரப்புரை என்பது தமிழகத்தில் நடத்தப்பட்டதுவே.

——————–

தமிழ் நாட்டைச் சேர்ந்த சில குறிப்பிட்ட சக்திகள் சிங்கள தேரவாட பௌத்த நிறுவனங்கள் நடத்திய இனப்படுகொலை பாதகத்தை, சாதியத்திற்கும் பார்ப்பனீய கொடுவினைகளுக்கும் எதிராக ‘தேவைப்படும் மற்றும் முற்போக்கு’ நடவடிக்கையாகவும், அதற்காக தமிழ் நாட்டுத் தமிழர்கள் மனக்கசப்பு கொள்ள வேண்டியதில்லை என்பதை முன்நிறுத்தவும் முயன்றுவருகிறார்கள். அத்தகைய பரப்புரை என்பது குறிப்பிட்ட சில வகுப்புகளில் உள்ள எளிதில் நம்பவைக்கக் கூடியவர்களை நோக்கியே உள்ளது.

இந்தியாவிலும், குறிப்பாக தமிழ்நாட்டிலும் உள்ள மக்கள், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அம்பேத்கர் பரிந்துரைத்த மஹாயான பௌத்தத்திற்கும் தேரவாட சிங்கள-பௌத்தத்திற்கும் உள்ள வித்தியாசத்தை மிகுந்த கவனத்துடனும், நுண்ணயத்துடனும் புரிந்துகொள்ள வேண்டும்.

தேரவாட சிங்கள-பௌத்தம் என்பது அதன் தொடக்கம் முதலே மஹாயான பௌத்தத்திற்கு தீவிர எதிராக இருந்துள்ளது, அது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மஹாயான பௌத்த நிறுவனங்களை (இலங்கை) தீவைவிட்டு வெளியேற்றும் அளவிற்கு இருந்துள்ளது.

தமிழ், கன்னடம் மற்றும் திராவிட மண்டல மக்களின் மொழிகளின் வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக தமிழ் நாட்டின் மற்றும் தென்னிந்தியாவின் சமணம் இருந்தது போல் அல்லாமல், பாலி மொழி சமய குறிப்புகளை அடிப்படையாகக் கொண்ட தேரவாட சிங்கள-பௌத்தம் வரலாற்றுரீதியாகவே தமிழில் எது இருந்தாலும் அதை அழிப்பதிலேயே குறியாக இருந்துள்ளது. அது சிங்கள உருவாக்கத்திற்கு ஆரிய புணைவேயே பூண்டுள்ளது உண்மையில் திராவிட அடித்தளத்தை பகிர்ந்து கொண்டிருந்தாலும்.

தேரவாட சிங்கள-பௌத்தம் (இலங்கை) தீவில் உள்ள தமிழர்களை ‘இரண்டாந்தர சிங்களவர்’களாக ஆக்கும்வரை ஓயப்போவது இல்லை. இதை அது காலங்காலமாக செய்துகொண்டே, இதில் தவறு என்ன இருக்கிறது (மயான) ‘அமைதிக்கும்’ முழுத்தீவிற்குமான ‘ஒற்றை அரசுக்கும்’ அது அடிகோலும் என்றும் வாதிட்டுவருகிறது.

சாதிச் சிக்கலுக்கு தேரவாட சிங்கள-பௌத்தம் தீர்வாக இருக்காது. கோயிகாமா என்னும் உயர்ந்த சாதியினரைத் தவிர வேறு யாரும் (இலங்கை) தீவின் முக்கிய சங்கங்களில் பிக்குகளாக ஆக முடியாது. இதை பாரம்பரியமாகவும், நடைமுறையிலும் மற்றும் முக்கியமான சங்கங்களிலும் மடங்களிலும் அவர்களுக்கு உள்ள அதிகார வகிப்பின் மூலமும் கட்டுக்குள் வைத்துள்ளனர்.

தேரவாட பௌத்தம் பார்ப்பனீய கொடுவினைகளுக்கும் தீர்வாகாது ஏனெனில், இரண்டுமே ஒரு கூட்டுப்பறவைகள் மற்றும் அதிகாரம், காலணித்துவம், ஆதிக்கம், சமூக ஏகபோகம், ஏகாதிபத்தியம் என்னும் கூறுகளில் அவர்கள் இருவருமே அணிதிரண்டு நிற்பர்.

ஒருபுறம் சிங்கள பௌத்தமே தாழ்த்தப்பட்டசாதி தமிழர்களுக்கு நம்பிக்கை என்று பரப்புரை செய்து கொண்டு மறுபுறம் ‘இந்தியம்’ என்று சொல்லப்படுகிற பெருந்தோற்றத்தை காரணம்காட்டி இனப்படுகொலை செய்த சிங்கள-பௌத்தத்திற்கு முட்டுக்கொடுத்து வருவதும், இந்தியாவின் பிறபகுதிகளில் இடமளிப்பதும், சமரசம் செய்துகொள்வதும், ‘இந்துத்துவ’ சக்திகளே.

bud-sing
வெறும் ‘இந்துத்துவ’ சக்திகள் மட்டுமல்ல போலி-மதச்சார்பின்மை வேடமணிந்த புது தில்லியின் வல்லாதிக்கவாதிகளும் சேர்ந்தே தங்களது அதிகாரம்-சார்ந்த கருத்தியல் நோக்கத்திற்காக இனப்படுகொலை குற்றத்தை மூடி மறைப்பதில் முன்னணியில் இருந்தனர். போர் முடிவுற்ற விரைவிலேயே (இலங்கை) தீவில் பௌத்தத்தை முழுமையாக போதிக்கவும் இனப்படுகொலை அரசிற்கு அங்கீகாரம் வழங்குவதற்கும் கொழுப்புவிற்கு சென்றவர்களில் பேராசிரியர் உரொமிளா தாப்பரும் ஒருவர்.

புனித வாட்டிகனும் ராஜபக்ஷவையும் அவரது சகோதரர்களயும் வரவேற்றது அங்கீகாரம் அளித்ததும், ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அரசியல் அநீதிகளை திட்டமிட்டுவடிவமைத்த நிறுவனங்களில் அவர்களும் விலக்குஅல்ல என்பதை உணர்த்தியது. சிங்கள அரசை நியாயப்படுத்திய சிங்கள பேராயர் மால்கோம் ரஞ்சித், முள்ளிவாய்க்கால் போருக்குப்பின் கர்தினாலாக உயர்த்தப்பட்டு கடந்தமுறை போப்பாண்டவரை தேர்ந்தெடுத்த கர்தினால்மார் குழுவில் இடம்பெற்றார். போப்பாண்டவராக தேர்ந்தெடுக்கப்பட சாத்தியமுள்ள வேட்பாளர் என்கிற அளவிற்கு அவர் கருதப்பட்டார். சிங்கள தேரவாட பௌத்தத்தின் தமிழர்கள் மீதான அனுகுமுறை என்பது, மதம்சார்ந்ததோ, தத்துவார்த்தரீதியானதோ, சமூக புரட்சிகரமானதோ, மனிதநேயமானதோ, ஏன் அறிவு நிலையைக் கடந்த “பாபாக்கள்” வகைசார்ந்ததோ கூட அல்ல.

இனப்படுகொலை நோக்கத்தை எந்தவித ஒளிவுமறைவுமில்லாமல், வெளிப்படையாகவே இனப்படுகொலை செய்த ஆக்கிரமிப்பு இராணுவத்துடனும், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுடனும், காளான்கள் போன்று ஆங்காங்கே நிறுவப்படும் தூபிகளுடனும், பிக்குகளின் அணியுடனும், கருத்தியல்ரீதியாக தோற்றுவிட்ட உலகளாவிய நிறுவனங்களின் துணையோடு செய்துவருகிறது. தமிழர்களை பௌத்தர்களாக ஆக்குவதைவிடவும், சிங்களவர்களாகவோ சிங்கள அடிவருடிகளாகவோ ஆக்குவதே முதன்மை குறிக்கோளாக இருக்கிறது, அதன்மூலம் ஒட்டுமொத்தமாக சிங்கள நிலமாக்கி ஏகாதிபத்தியவாதிகளிடம் அடகுவைப்பது நடந்துவருகிறது.

சிங்கள மக்கள் ஐரோப்பிய காலனியாதிக்க காலத்தின் வரலாற்றை சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

150 ஆண்டுகள் காலனியாதிக்கம் நிலைத்தபோதும், நூற்றுக்கணக்கான தேவாலையங்களை டச்சுக்கார்ரகள் (இலங்கை) தீவில் கட்டியிருப்பினும், சீர்திருத்தப்பட்ட டச்சு சபைகள் அதிவிரைவாக மறைந்துவிட்ட போதும், ஏன் (இலங்கை) தீவில் சிங்களவர்களிடத்தேயும், தமிழர்களிடத்தேயும் கத்தோலிக்க கிறித்தவம் நிலைபெற்றது என்ற வினாவை எப்பொழுதும் கேட்டுக்கொள்ள வேண்டும். புரொடெஸ்டண்ட் ஆட்சியில் கத்தோலிக்கர்கள் அனுபவித்த ஒடுக்குமுறையின் காரணமாக வெகுமக்களிடையே எழுந்த தன்மான உணர்வே முக்கியமான காரணியாகும்.

சிங்களம் அல்லது பிற தெற்க்காசிய மொழிகளைப் போலல்லாமல் தமிழ் என்பது வழக்கிலுள்ள இருக்கிற அனைத்து முக்கியமான மதங்களுக்கும் அதுபோலவே சில அழிந்துவிட்ட மதங்களுக்கும் ஊடகமாக செயல்பட்ட அறிய பேறைப் பெற்றுள்ளது.

தங்களுடைய நீண்டநெடிய நாகரீகத்தில், பல்வேறுபட்ட மனிதர்களிடம் பகிர்ந்து கொண்ட அனுபவத்தால், தமிழர்கள் எந்தவிதமான அதிகாரத்திற்கு எதிராகவும் கிளர்ந்தெழும் உணர்வை என்றுமே தக்கவைத்துக் கொண்டுள்ளனர், அகநிலை சூழ்ச்சிகளால் வென்றிட நினைத்த அரசியல், சமூக, இராணுவ, அல்லது காலனீய என எந்த அதிகாரமாகிலும். தமிழர் மதம் சார்ந்த சிந்தனையின் அடிப்படையானது தன்மான உணர்வுக்கான நாட்டம் என்பதே, இது சங்க இலக்கியங்கள், திருக்குறள், பக்தி இலக்கியங்கள் தொட்டு, பாரதியின் பொன்வால் நரி (The Fox with Golden Tail) அல்லது புதுமைப்பித்தனின் சிறுகதைகள் வரை பதிவுசெய்யப்பட்டுள்ளதை காணலாம்.

“மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்த தொழித்து விடின்”

அதாவது, உலகம் பழிக்கும் தீய ஒழுக்கத்தை விட்டு விட்டால் மொட்டை அடித்தலும் சடை வளர்த்தலுமாகிய புறக்கோலங்கள் வேண்டியதில்லை என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் சாடியது அனைத்து நிறுவனமயப்படுத்தப்பட்ட மத மோசடிகளையும் தான். ஈழத் தமிழர் மீதான சிங்கள-பௌத்தத்தின் நடவடிக்கைகளை, பார்ப்பனீய கொடுவினைகளுக்கான மாற்று மருந்து என்றும் இந்தியாவில் பௌத்தத்தை பரப்புவதற்கான வழிவகை என்றும் மேற்கொள்ளப்படும் பரப்புரையை முறியடித்து, எளிதில் நம்பிவிடக்கூடியவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழகத்திலுள்ள முற்போக்கு சக்திகள் பாடுபட வேண்டும்.

நன்றி : தமிழ்நெற்