தோழர் தியாகுவின் கோரிக்கையை முன்னெடுப்போம். அவரது உயிரை காப்பாற்றுவோம்

0
584

thiyaku087நேற்று தியாகு அய்யா உண்ணாவிரதம் இருக்கும் புரசைவாக்கத்தில் பெருந்திரளான உணர்வாளர்கள் கூடியிருந்தது பெரும் நம்பிக்கையளிக்கும் விதத்தில் இருந்தது. அனைத்து இயக்கங்களும் கட்சிகளும் இனைந்து தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களை நடத்த இருப்பதாக அறிவித்துள்ளனர். மேலும் நாளை முதல் மாணவர்கள் தொடர்ச்சியாக போராட இருப்பதாக அறிவித்துள்ளனர். வரும் 15 ஆம் தேதி தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பாக வேல்முருகன் அண்ணனும் 17 ஆம் தேதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக அண்ணன் சீமானும் போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளனர். போராட்டம் இப்பொழுதுதான் நம்பிக்கையளிக்கும் விதத்தில் இருக்கிறது.

தமிழர் முன்னேற்ற கழகமும், தமிழர் பண்பாட்டு நடுவமும் ஒழுங்கு செய்த ஒரு நாள் கருத்தரங்கு சென்னை இக்காச மையத்தில் நடந்தது. தமிழகத்தில் இன நலம் சார்ந்த ஒரு அரசியல் கூட்டணி உருவாக வேண்டும் எனவும் , அது அதிமுக, திமுக, தேமுதிக, காங்கிரஸ், பாஜக போன்ற காட்சிகளுக்கு மாற்றாக வரும் தேர்தலில் களமிறங்க வேண்டும் எனவும் அதை நாம் உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த கலந்தாய்வு நடைபெற்றது.

இந்த கருத்தரங்கில் பல தமிழ்த் தேசிய இயக்க சிந்தனையாளர்கள் , இயக்கத் தலைவர்களும் பங்கேற்று தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர். தழல் ஈகி முத்துக்குமாரின் தகப்பனார் குமரேசன் ஐயாவும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டார். தமிழர்களுக்கு இருக்கும் அரசியல், சமூக, பண்பாட்டு, பொருளாதார சிக்கல்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. முடிவில் ஒரு குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது. அந்தக் குழு முக்கிய தமிழர் நலம் சார்ந்த கட்சிகளோடு பேச்சு வார்த்தை நடத்தி அவர்களை ஒரே கூட்டணியில் தேர்தலை சந்திக்க வலியுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபடும். அதற்கான செயல்திட்டம் வகுக்கப்பட்டது.

பின்பு கலந்தாய்வில் கலந்து கொண்ட பலரும் மாலையில் தோழர் தியாகு ஐயாவின் 13 ஆம் நாள் உண்ணா நிலைப் போராட்டம் நடக்கும் திடலுக்கு சென்றனர். அங்கு மது ஒழிப்பு போராளி சசி பெருமாள் ஐயா வந்திருந்தார். அவர் தோழரின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கினார். சசி பெருமாள் ஐயாவின் மது ஒழிப்பு போராட்டத்திற்கு நம் ஆதரவு எப்போதும் உண்டு என்றும் கூறினோம். இன்று தோழர் தியாகுவின் போராட்டத் திடலுக்கு பல அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பல நூறு உணர்வாளர்கள் கூடி வந்து தங்கள் ஆதரவை வழங்கினர் என அதியமான் தமுக தெரிவித்துள்ளார்..

இதனிடையே, வெற்றி அல்லது வீரச்சாவு என்ற முழக்கத்துடன் தோழர் தியாகு கடந்த 13 நாட்களாக உண்ணாவிரதம் இருக்கிறார். இந்நிலையில் தோழரின் உடல்நிலை மிகவும் பாதிப்படைந்துள்ளது. நீரிழிவு நோய் இருக்கும் தோழர் தியாகு மயக்கமடைய நேர்ந்தால் அது மிகவும் ஆபத்தானதாகும்.இதற்கு மேலும் இந்த தமிழ் சமுதாயம் மௌனம் காப்பது என்பது அவரை கொள்வதற்கு சமம். எனவே தோழர்களே நேற்று மாலை 5 மணிக்கு அவர் உண்ணாவிரதம் இருக்கும்

உழைக்கும் மக்கள் மன்றம், வாசுதேவன் தெரு, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை பின்புறம், புரசைவாக்கத்தில் ஒன்றுகூடுவோம்.

தோழர் தியாகுவின் கோரிக்கையை முன்னெடுப்போம். அவரது உயிரை காப்பாற்றுவோம்.