நச்சுப்பாம்பு நாகமணியை துப்புமா என்ன?…. நஞ்சைத்தானே கக்கும்…

0
623

hinduமே பதினேழு இயக்கம் ஆரம்பித்த பொழுது எங்களின் முதல்பணியே இந்த நச்சுப்பாம்பினை அடிப்பதுதான். தொடர்ச்சியாக பிரச்சாரம் மேற்கொண்டபொழுது தோழர்கள் சிலர் சொன்னார்கள் “.. ‘இந்து’ மீது ஏன் இத்தனை பெரிய அக்கறை கொள்கிறீர்கள்?.. அவன் என்ன செய்துவிட முடியும்….”

நவம்பர் 2009இல் நேரடியாக் ராமினை எதிர்கொண்டு கேள்வி எழுப்பிய பொழுது அவன் முகம் வேர்வையில் நனைந்ததை கவனித்திருக்கிறேன்.. தமிழினப்படுகொலையில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பங்கெடுத்தவனைப் பற்றி இதுவரை ஏன் எந்த ஒரு ஈழ ஆதரவு இயக்கங்களும் போர்க்குணமிக்க போராட்டம் எடுக்கவில்லை என்கிற கோபம் எனக்குண்டு… 2009இலிருந்து , 2010 வரை தொடர்ந்த எங்களின் தி இந்து எதிர்ப்பினை கண்டு சில தோழர்கள் கூட அவதூற்றினை முன்வைத்தார்கள், “மே17 இந்துவிடம் பணம் பெற்றுக்கொண்டு அவர்களை விளம்பரப்படுத்துகிறார்கள்” என்று…. சிரிப்புதான் வந்தது அவர்களைப் பார்த்து…

இந்த ஒரு அயோக்கியன் இதுவரை நம்மை அழித்தது போதாதா?… வீரவசனம் பேசிக்கொண்டு நம் தமிழ்ச்சமூகம் அலையும் பொழுது இவன் தனது நஞ்சை தமிழில் கக்க ஆரம்பித்தான். அப்பொழுதாவது ஒரு விழிப்பு வரும் என்று நம்பினேன்… ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தின் அரசியல்-சமூக அறிவினை மழுங்கடித்து பார்ப்பனிய மயமாக்கும் வரைதமிழ்ச் சமூகம் அமைதி காக்கப்போகிறதா என்ன?…

”ஈழவிடுதலையைப் பற்றி மட்டும் பேசுகிறீர்களே, தமிழகத்தினைப் பற்றி எப்பொழுது பேசப்போகிறீர்கள்?” என்று தமிழ்நாட்டு பிரச்சனைகளில் எங்களது பங்கெடுப்பினை அறியாதவர்கள் கேட்கும் பொழுது அவர்களுக்கு சொல்லவிரும்புவது ஒன்றுதான், “ தமிழ்நாட்டு தமிழ்ச் சமூகத்தின் விடுதலையை தடுக்க விரும்புபவர்கள்தான் , தமிழீழ விடுதலையை அழிக்க முன்வந்தார்கள். இவர்களை நாம் தமிழீழ களத்தில் எதிர்கொள்ளவிட்டால் , நாளை நம் களத்திலும் சேதம் விளைவிப்பார்கள்”….

ஈழவிடுதலையை நேசிப்பவர்கள் வெற்றுப்பேச்சு பேசாமல் களம் காணுங்கள்.. பேசி, பேசி நாம் நேரம் கழித்தது போதும்…

”தி இந்து “ தமிழீழ மக்களை கொலை செய்த மாபாதகன்.. அவனை எதிர்த்துக் களம் காணாமல் வீரம் பேசுவது கோழைத்தனமே…

தோழர்.திருமுருகன் காந்தி