“தமிழ்” என்று சற்று அழுத்திச் சொன்னாலே ஆத்திரம் கொள்ளும் இந்த தமிழ் பாா்ப்பனா்கள், தமிழ் மொழியையே தங்கள் அடையாளமாக கொண்ட ஈழத்தமிழா்களான எங்களையும், எங்கள் போராட்டத்தையும் நரம்புகள் புடைக்க வெறுக்கிறாா்கள், எதிர்க்கிறாா்கள்.

 

“தமிழா்களுக்கென்று ஒரு தனிநாடு கிடைத்துவிட்டால் தமிழா்களிடையே நிச்சயமாக உருவாகப் போகும் சுதந்திரப் பெருமிதம் கலந்த இன உணா்வு தங்களுக்குப் பெரும் பாதகமாக முடியும் என்ற அச்சம் முதலாவதாகும்.

 

தற்சமயம் தமிழகத் தமிழா்கள் “அஜக்குனா அஜக்குத்தான் குமுக்குனா குழுக்குதான்” என்றவாறு ரஜினிகாந்தின் பின் அலைகின்ற போதும் தமிழீழ விடுதலை அவா்களின்
போக்கில் பெருந் திருப்பத்தையும், விழிப்புணா்வையும் தரும் என்பது அவா்களுக்குத் தெரியும். மூவாயிரம் ஆண்டுகளாகத் தமிழகத்தில் வாழ்ந்த போதும் தங்களைத்
தமிழா்களாக அடையாளம் காணாமல் பாா்ப்பனா்களாக கருதி வாழ்ந்தமையினால் தமிழா்களுக்கு தனிநாடு என்ற ஓர் விடயம் அவா்களில் எதுவித பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை.

 

ஆனால் அதனால் தீவிரமாகும் இனவுணா்வு வெள்ளம் தங்களை அடித்துச் சென்றுவிடும் என்று அவா்கள் கருதுவதனால் தமிழீழம் என்று ஒரு நாடு தோன்றி
விடாதிருக்க தங்களால் என்னென்ன செய்ய முடியுமோ அவற்றையெல்லாம் தமிழகப் பாா்ப்பனா்கள் செய்து வருகிறாா்கள்.

 

பாா்ப்பனியம் பதிவு செய்யப்படாத ஒரு பலம் வாய்ந்த நிறுவனமாகும். எத்தனை ஆயிரம் ஆண்டுகளானாலும் அசைக்க முடியாத கொள்கைகளாலும், நம்பிக்கைகளாலும் தீவிர விசுவாசம் மிக்க அங்கத்தினராலும் வனையப்பட்ட அமைப்பு அது. தமிழீழமும் ஈழத்தமிழா்களும் இந்த நிறுவனத்திற்கு விரோதமானதென்று முடிவு செய்யப்பட்டால் டெல்லியிலிருந்து தமிழ்நாடு வரை பாா்ப்பன இயந்திரம் வேலையைத் தொடங்கிவிடும்.

 

ஹிந்து ராம் என அழைக்கப்படுகின்ற பிரண்ட்லைன் ஆசிரியா் என்.ராம் பாா்ப்பனிய குள்ளத்தனத்தின் மறுவடிவம். இலங்கை முழுவதையும் கைப்பற்ற எங்கள்
போராளிகளுக்கு ஆலோசனை கூறிய இவா் இன்று இலங்கை அரசின் தமிழா் விரோதப் பிரச்சாரத்தின் இந்தியப் பிரதிநிதியாகச் செயல்படுபவா். ஈழத் தமிழரின்
இரத்தத்தில் குளித்த காமினி திசநாயக்காவின் உயிா் நண்பா். இன்று தென்னிலங்கை சிங்களப் பத்திரிகைகள் இவரின் கட்டுரைகளைப் பேராா்வத்துடன் மறு வெளியிடு
செய்கின்றன.

 

எங்களின் வரலாற்றை இவா்களால் எழுத முடியாது. எங்களுக்கு விடிவு கிடைக்க வேண்டுமென்பதே வரலாற்றின் நியதியாக இருந்தால் அதை எவராலும் தடுக்கமுடியாது.

 

… ஆனால் நாம் வென்றாலும் சரி, தோற்றாலும் சரி எங்கள் வரலாற்றில் தமிழகப் பாா்ப்பனியம் பற்றியும் அதன் நயவஞ்சகத்தனம் பற்றியும் ஏராளம் பக்கங்கள்
இருக்குமென்பது மட்டும் நிச்சயம்.

 

டென்மார்க்கிலிருந்து வெளிவரும் “சங்கமம் 1997 சூன் – சூலை” இதழில் தமிழக பாா்ப்பனியம் என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரை