பயங்கரவாத தடைச் சட்ட நீக்கம், அரசியல் கைதிகள் விடுதலை, பொது மக்கள் காணிகள் விடுவிப்பு, படையினரை வடக்கில் இருந்து நீக்குதல், சிங்களமயமாக்கலை தடுத்து நிறுத்துதல் என்பனவற்றில் கவனம் செலுத்தாமல் ஐ. நா. வுக்கு நல்லிணக்கம் காட்ட நாடகங்களை நடத்துகின்றது சிறிலங்கா அரசு.

 

அதற்கு முண்டு கொடுக்கின்றனர் சுமந்திரன் போன்ற அரசியல்வாதிகள். ரணிலுக்கு முண்டு கொடுக்க முன்பு நிபந்தனைகள் விதிக்காமல் வக்காலத்து வாங்கியவர் சனாதிபதி சட்டத்தரணி.

 

ஐ. நாவில் மார்ச் மாதம் நடக்கவுள்ள 40 ஆவது அமர்வில் இலங்கை பிரச்சனை பேசப்படவுள்ள நிலையில் அதை மூடி மறைத்து நாடகம் போட எல்லா வேடதாரிகளும் இறங்கி விட்டார்கள்.

 

புரையோடிய புண்ணுக்கு மருந்திடாமல் மூடி கட்ட முயலும் சிங்கள பௌத்த பேரினவாதிகளோடு எம் அரசியல்வியாதிகளும் கூடி நின்று கூத்தடித்த காட்சிகளை இதுவரை நாம் கண்டது போதும் .

 

இன்று முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக போராடும் உறவுகளின் 700 வது நாள் போராட்டம்.

 

நல்லாட்சி அரசின் ஜனாதிபதி மற்றும் பிரதமரது வடக்கிற்கான பயணங்கள் ஏமாற்று நாடகங்கள் என்பதை உலகமே இன்று நன்கு அறிகிறது.

 

காணி விடுவிப்பு, காணாமல் போனோர் விவகாரம், பௌத்த மயமாக்கல் என பல பிரச்சினைகள் தொடர்பில் அரசு மீது தமிழ் மக்கள் சீற்றங்கொண்டுள்ளனர்.

 

அதன் தொடர்ச்சியாகவே முல்லைதீவிற்கு வருகை தரும் மைத்திரிக்கெதிராக மக்கள் போர்க்கொடியை தூக்கியுள்ளனர்.

 

தேசிய போதைப்பொருள் ஒழிப்பு பாடசாலை வார நிகழ்வுகளை ஆரம்பிக்க என சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று முல்லைத்தீவு, முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரிக்கு சென்றுள்ளார்.

 

ஜனவரி 21ஆம் நாள் தொடக்கம், 28ஆம் நாள் வரை தேசிய போதைப்பொருள் ஒழிப்பு பாடசாலை வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் இன்று நடைபெற்ற இது தொடர்பான ஆரம்ப நிகழ்வில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பங்கேற்கவுள்ளார் பங்கேற்றார்.

 

புலிகள் காலத்தில் இல்லாத போதைப்பொருள் விற்பனை இன்று சிங்கள அரசபடைசூழலிலேயே சூழலில் நிகழ்ந்து வருகின்றது. திட்டமிட்டு தமிழினத்தை அழிக்க கலாச்சார சீரழிவை ஆயுதமாக கையில் எடுத்து களமிறக்கப்பட்ட வஞ்சனை சூழ்ச்சி வலை இது.

 

இப்பொழுது நல்ல வேடம் போட்டு வருகிறார் மைத்திரி. போராடும் மக்களுக்கு பதில் சொல்ல வக்கில்லை. இனப்படுகொலை செய்த இராணுவத்தை விசாரிக்க விடமாட்டேன் என இனவாதம் பேசும் மைத்திரி தமிழர் நிலங்களில் நல்லாட்சி நாடகம் போட முயல்கின்றார்.

 

இந்த நிகழ்வில் பங்கேற்க வரும் சிறிலங்கா அதிபருக்கு எதிர்ப்புத் தெரிவித்து, முள்ளியவளையில் கவனயீர்ப்புப் போராட்டங்கள் நடத்த கேப்பாப்பிலவில் தமது காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம் நடத்தி வரும் மக்களும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளும், இன்று முயன்ற நிலையில் அவர்களை முடக்கி இருக்கின்றது சிங்கள கூலிப்படை.

 

பயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக யாழில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று யாழ். வேம்படி சந்திக்கருகில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணியளவில் நடைபெற்றபோது ஒன்று கூடியவர்கள் பேரணியாக யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு பதில் சொல்ல மைத்திரி வாய் திறக்கவில்லை.

 

சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரியாக, போர்க்குற்றச்சாட்டு, இனப்படுகொலை குற்றம் சுமத்தப்படும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளதானது உள்ளிட்ட இனப்படுகொலையாளிகளை போற்றி பாதுகாக்கும் நாட்டின் தலைவரிடம் என்ன நன்மைகளை தமிழினம் பெற்று கொள்ள முடியும் ?

 

இது பற்றி அமெரிக்கா- சிறிலங்கா இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று அமெரிக்க நாடாளுமன்றத்தின் வெளிவிவகாரக் குழு தலைவர் எலியட் ஏஞ்சல் தெரிவித்துள்ளார்.

 

”போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களில் முக்கிய பங்கு வகித்தார் என்று ஐ.நாவினால் குற்றம்சாட்டப்பட்ட மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளமை கவலையை ஏற்படுத்துகிறது.

 

இது அமெரிக்கா- சிறிலங்கா இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.

 

போர்க்குற்றவாளி என்று ஐ.நா நம்புகின்ற ஒருவரை, இராணுவத் தலைமை அதிகாரியாக நியமித்துள்ள நிலையில், போர்க்குற்றவாளிகள் பொறுப்புக்கூற வைப்பதில் உங்களின் நேர்மை எப்படி நிரூபிக்கப்படும்” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

இதனிடையே யாழ்ப்பாணத்தில் இராணுவம் கையகப்படுத்தியுள்ள காணிகள் இன்று விடுவிக்கப்படுமென ஜனாதிபதி அறிவித்த போதும் இராணுவம் மக்களை குறித்த காணிகளுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதனால் இன்று (திங்கட்கிழமை) தமது காணிகளுக்குச் செல்ல வந்த காணி உரிமையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர்.

 

வடக்கில் 1000 ஏக்கரிற்கும் மேற்பட்ட காணிகளை இன்றைய தினம் மீள மக்களிடம் கையளிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முல்லைத்தீவில் வைத்து தெரிவித்திருந்தார்.

 

இதன்படி யாழ்.வலி வடக்கில் 45 ஏக்கர் காணி விடுவிப்பதாக தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக தையிட்டி தெற்கில் 30 ஏக்கர் காணிகளும், ஓட்டகப்புலத்தில் 15 ஏக்கர் காணிகளும் விடுவிப்பதாக தெரிவிக்கப்பட்டது.

 

இதனையடுத்து இன்று காலை குறித்த காணிகளின் உரிமையாளர்கள் தமது காணிகளை பார்ப்பதற்கு சென்றிருந்தனர். எனினும் எவரையும் இராணுவம் அவர்களது காணிக்குள் செல்ல அனுமதித்திருக்கவில்லை என்பதால்
காலையில் இருந்து காத்திருந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இவ்வாறாக இரட்டை வேடம் போடும் சிங்கள இனவாதிகளின் பசப்பு வார்த்தைகளை நம்ப சொன்ன சம்பந்தர் ஐயா போன்றவர்களே இப்போ ஓய்ந்த நிலையில் தமிழினம் இனியும் முட்டாள்களாக ஏமாற கூடாது.

 

நன்றி: சிவவதனி பிரபாகரன்.