சிறீலங்காவில் உள்நாட்டு நிறைவுபெற்றதாக சிங்கள அரசு 2009 ஆம் ஆண்டு அறிவித்திருந்தது. ஆனால் உண்மையில் உள்நாட்டு போர் நிறைவடைந்துவிட்டதா என்பதே தற்போதைய கேள்வி? இதற்கான பதில் இல்லை என்பதே.

 
தமிழீழத் தேசிய தந்தை மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் கூறியது போல போராட்ட வடிவங்கள் மாற்றம் பெற்றுள்ளது. அதாவது போரட்டம் தொடர்கின்றது.

 

விடுதலைப்புலிகளின் ஆயுதப்போரானது மக்கள் போராட்டமாக பரிணமித்துள்ளது.
தமது காணிகளில் நிலைகொண்டுள்ள சிங்கள படையினரை வெளியேறுமாறு கூறி ஒரு தொகுதி மக்கள் போராடுகின்றனர். காணாமல் போன தமது உறவுகளை மீட்டுத்தருமாறு ஒரு தொகுதி மக்கள் போராடுகின்றனர். சிறீலங்கா சிறைகளில் விசாரணைகளின்றி அடைத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை விடுதலை செய்யக்கோரி மற்றுமொரு போராட்டம்.

 
இது மட்டும்லாது சிங்கள படையினரால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மீதான அனைத்துலக விசாரணைகள் வேண்டுமென தெரிவித்து அனைத்துலகரீதியாக மேற்கொள்ளப்பட்டுவரும் புலம்பெயர் தமிழ் மக்களின் போராட்டம், தமிழ் மக்களுக்காண உரிமைகள் வழங்கப்பட்ட வேண்டும் என கோரி மேற்கொள்ளப்பட்டும் போராட்டம் என தமிழ் மக்களின் போராட்டம் பல கிளைகளாக பிரிந்து தொடர்கின்றது.

 
அதாவது சிங்கள அரசினாலோ அல்லது அதன் இனப்படுகொலைக்கு உதவியவர்களாலோ தமிழ் மக்களின் போராடும் சக்கதியை உடைக்க முடியவில்லை. உலகில் இடம்பெற்ற விடுதலைப்போராட்டங்களில் போராடும் மக்களுக்கு ஆதரவாக அவர்களுக்காக குரல்கொடுக்கும் அரசியல் கட்சிகள் முக்கிய பங்கு வகிப்பதுண்டு.

 
ஆனால் தமிழ் மக்களின் போராட்டத்திற்கு உறுதுணையாக அல்லது அவர்களின் போராட்டத்தை ஒரு அனைத்துலக தளத்திற்கு எடுத்துச் செல்வதற்கான சக்தியாக விளங்கக்கூடிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறும் பிரதான கட்சியான இவர்கள் மக்களின் போரட்டங்களை புறக்கணித்துவருவதாகவே தோன்றுகின்றது.

 
அப்படியெனில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்ன செய்கின்றது? இந்திய அரசினால் நடத்தப்படும் கொண்டாட்டங்கள், சிறீலங்கா அரச தலைவர்களின் வீடுகளில் நடைபெறும் பொங்கல் விழா மற்றும் கொண்டாட்டங்கள், பெரும் முதலாளிகளின் கடை திறப்புவிழா, திருமண விழாக்கள் என்பவற்றில் பங்கெடுப்பதற்கே பாவம் அவர்களுக்கு நேரம் போதுமானதாக இருப்பதில்லை.

 
500 இற்கு மேற்பட்ட நாட்களாக தெருவில் கிடந்து போராடும் தமது மக்களுக்கு ஆதரவாக செயற்பட அவர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை. காணாமல் போனவர்களின் உறவினர்கள் வீதியில் கிடக்கின்றனர், நிலங்களை இழந்த தமிழ் மக்கள் தெருவில் கிடக்கின்றனர், போராடும் மக்களும் பல இன்னல்களை சந்திப்பதுடன், மரணத்தையும் தழுவிவருகின்றனர். போர் நிறைவடைந்து விட்டதாக சிங்கள அரசு தெரிவித்து ஒன்பது ஆண்டுகள் கடந்த நிலையிலும் சிங்களப் படைகளினால் கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைகள் எதுவுமின்றி சிறையில் கிடக்கின்றனர்.

 
பயங்களவாதத் தடுப்புச்சட்டமும் அகற்றப்படவில்லை எனவே அந்த சட்டம் மூலம் அதிக அதிகாரங்களை பெற்றுவரும் சிங்கள படையினர் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகளில் தற்போதும் ஈடுபடுகின்றனர்.

 
கடந்த 30 வருடங்களில் 60 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் சிறீலங்காவில் காணாமல்போயியுள்ளனர் என ஐக்கி நாடுகளின் தகவல்கள் தெரிவிக்கின்றன ஆனால் இந்த தொகையானது பல மடங்கு அதிகமானது. ஏனெனில் 2005 ஆம் ஆண்டில் இருந்து 2009 ஆம் ஆண்டு வரையிலும் பல ஆயிரம் தமிழ் மக்கள் சிறீலங்கா படையினரால் காணாமல் போகச் செய்யப்பட்டுள்ளனர்.

 
காணாமல் போவோர் தொடர்பான குற்றச்சட்டுகளில் ஈராக்கிற்கு அடுத்த நிலையில் சிறீலங்கா உள்ளதாக ஐக்கிய நாடுகளின் தகவல் மேலும் தெரிவித்துள்ளது. தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் இது தற்போதும் தொடர்கின்றது. தமது காணிகளில் உள்ள படையினரை வெளியேறுமாறு போராட்டங்களில் ஈடுபடுவோர், காணாமல்போன தமது உறவுகளை மீட்டுத்தரும்படி கோரி போராடும் மக்களுக்கு உதவிகளை செய்பவர்கள், சிங்கள படையினரினதும் சிறீலங்கா அரசினதும் தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எதிர்ப்போர் போன்றவர்களை சிறீலங்கா படையினர் தற்போதும் கடத்தி துன்புறுத்தி வருவதாக அல்ஜசீரா தொலைக்காட்சி சமீபத்தில் வெளியிட்ட ஆவணக் குறிப்பொன்றில் தெரிவித்துள்ளது.

 
சிங்கள அரசின் இந்த நடவடிக்கையினை தொடர்ந்து கடந்த 3 வருடங்களில் பிரித்தானியாவில் மட்டும் 80 இற்கு மேற்பட்டவர்கள் புகலிடத்தஞ்சம் கோரியுள்ளனர். அதிலும் இந்த வருடத்தில் மட்டும் 6 பேர் பிரித்தானியாவில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

 
ஆனால் சிங்கள அரசின் நல்லாட்சிக்கு ஆதரவழிக்கும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு மிகப்பெரும் இனத்துரோகத்தையும், தமிழ் மக்களை ஏமாற்றும் நடவடிக்கையையும் மேற்கொண்டு வருகின்றது.

 
துமிழத்; தேசியக் கூட்டமைப்பின் இந்த நடவடிக்கை தொடர்பில் இனப்படுகொலையாளியும், சிறீலங்காவின் முன்னாள் அதிபருமான மகிந்த ராஜபக்சாவின் சகோதரரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்சா என்ன கூறுகின்றார்?

 
நல்லாட்சி அரசுடன் இணைந்து செயற்படும் சம்பந்தர் வடக்கு, கிழக்கு மக்களுக்கு எதனைப் பெற்றுக்கொடுத்துவிட்டார்? ஏனக் கேட்கிறார் பசில்.

 
இதற்கு நாம் எதனைக் கூறமுடியும்? அது தான் கரடியே காறித் துப்பிடிச்சே.

 
ஈழம் ஈ நியூஸ்
.