போரினால் பாதிக்கப்பட்டு அங்கவீனமடைந்தவர்கள், குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்ளுக்கான வாழ்வாதார உதவி கோரல்

0
629

மதிப்பிற்குரிய புலம்பெயர் தமிழ் உறவுகளிற்கு!

போரினால் பாதிக்கப்பட்டு அங்கவீனமடைந்தவர்கள், குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்ளுக்கான வாழ்வாதார உதவி கோரல்

1. கழுத்துக்குக் கீழ் உணர்வு இழந்தவர்கள்

யுத்தம் காரணமாக காயமடைந்து முள்ளந்தண்டு பாதிக்கப்பட்ட பல இளைஞர்கள், யுவதிகள் கழுத்துக்கு கீழ் உணர்வு இழந்தவர்களாக உள்ளனர். இவர்கள் மிகவும் வறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். அதன் காரணமாக அவர்களை பராமரிப்பதற்கு யாருமற்றவர்களாக பெரும் துன்பங்களை அனுபவிக்கின்றனர்.
kajen-vanniமேற்படி கழுத்துக்கு கீழ் உணர்வு இழந்தவர்களை படுக்கையில் வைத்துப் பராமரிக்க வேண்டிய நிலையில் உள்ளனர். அவர்கள் சிறுநீர் மற்றும் மலம் வெளியேற்றுவதற்காக கதற்;றர் மற்றும் பம்பஸ் பயன்படுத்த வேண்டியவர்களாக உள்ளனர்.

இவற்றை தினமும் மாற்றி புதிது பய்னபடுத்த வேண்டிய தேவை உள்ளது. அவற்றை மாற்றுவதற்கு இன்னுமொருவருடைய உதவி தேவை. தினமும் கதற்றர் மற்றும் பம்பஸ் வாங்க முடியாதவர்கள் பலநாட்களுக்கு ஒரு கதற்றர் சிறுநீர் வெளியேற்றுவதற்காக பயன்படுத்தும் துர்ப்பாக்கிய நிலையிலுள்ளனர். அத்துடன் பம்பஸ் பயன்படுத்த வசதியில்லாதவர்கள் உறவினர்களது உதவியை தினமும் நாடவேண்டிய நிலைகாணப்படுகின்றது.

இவர்களுக்கு அருகில் உதவியாளர் ஒருவர் எந்த நேரமும் இருக்க வேண்டும். ஆனால் வறுமையான குடும்பங்களைச் சேர்ந்தவர்களைப் பொறுத்த வரையில் தினமும் கூலி வேலைக்குச்சென்று உழைக்க வேண்டியுள்ளார்கள். அவர்களால் உதவியாள் ஒருவருக்கு வேதனம் கொடுத்து பராமரிப்பிற்கு அமர்த்த முடியாத வறிய நிலையிலுள்ளனர்.

இவ்வாறான காரணங்களால் குறித்த பாதிப்புக்குள்ளானவர்கள் நீண்ட நேரம் உதவியாளர்கள் இல்லாது தனித்திருக்க வேண்டிய நிலையிலுள்ளனர். அதனால் நீண்ட நேரம் ஒரே இடத்தில் படுத்திருக்க வேண்டிய நிலையும் அதனால் படுக்கைப் புண்கள் ஏற்படுதல், மலம் சலம் என்பன படுக்கையில் வெளியேறுவதும் நடைபெறுகின்றது. பெருமளவானவர்களது உடைகளை துப்பரவு செய்வதற்கு ஏனையவர்கள் முன்வரத் தயங்கும் நிலையும், உடைகளையும், தங்கியிருக்கும் இடங்களையும் துப்பரவு செய்தற்கு வேண்டிய தொற்று நீக்கிகளை வாங்க பணம் இல்லாத நிலையும், அதனால் பெருமளவானவர்களது உடல் மற்றும் உடைகள் மற்றும் தங்கியிருக்கும் சூழல் எப்பொழுதும் ஒருவகை துர்நாற்றம் வீசும் நிலையும் காணப்படுகின்றது.

2. இடுப்புக்கு கீழ் உணர்வு இழந்தவர்கள்:

யுத்தம் காரணமாக காயமடைந்து முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டவர்களில் நூற்றிற்கும் மேற்பட்ட இளைஞர்கள், யுவதிகள இடுப்புக்கு கீழ் உணர்வு இழந்துள்ளனர். இவர்களும் சலம் வெளியேற்றுவதற்கு கதற்ரர் மற்றும் சிறுநீர் சேமிப்புப்பை(urine Bag) என்பவற்றையும், மலம் வெளியேற்றுவதற்கும் பம்பஸ்(pampers)ம் பயன்படுத்த வேண்டியவர்களாக உள்ளனர். இவர்கள் தமது நான்கு சக்கர நாற்காலியில் மலகூடத்திற்குச் சென்று தமது கடமைகளை ஓரளவுக்கேனும் பூர்த்திய செய்யக் கூடியவர்களாக உள்ளனர். வறுமையான குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக 99 வீதமானோர் இருப்பதனால் கதற்ரர், பம்பஸ், தொற்றுநீக்கிகள், மருந்துகள் வாங்குவதற்கு வசதிகள் இல்லை.

அத்துடன் பெருமளவர்களுக்கு நிரந்தர வீடுகளோ, சொந்த வீடுகளோ இல்லை. தங்குமிடங்களில் மல கூடங்கள் இல்லை. பலர் தங்கியிருக்கும் அறைகளில் இருந்து வெளிNறி மலகூடத்திற்கு தமது நான்கு சக்கர நாற்காலிகளை; கைகளால் உருட்டிச் செல்ல முடியாதளவுக்கு தரையானது மணல்பாங்காக காணப்படுகின்றது. இதனால் அவர்;கள் மிகவும் துன்பப்படுகின்றனர.

குடும்ப வறுமை காரணமாக இவர்களுக்கு வேண்டிய அடிப்படை உதவிகள் எதனையும் செய்ய முடியாத நிலையில் குடும்பத்தினர் உள்ளனர். அங்கவீனமடைந்தவர்கள் தமக்குப் பாரமாக உள்ளதாகவே பெருமளவான குடும்பத்தினர் கருதுகின்றனர். இதன் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் மீது வெறுப்புணர்வை வெளிப்படுத்துவதுடன், கவனிப்பாரற்றுவிடுகின்ற நிலைமைகளும் அதிகமாகக் காணப்படுகின்றது. எனவே மேற்படி நிலைமைகளை கருத்திற்கொண்டு மனிதாபிமான அடிப்படையில் மேற்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்க வேண்டியுள்ளது.

படுக்கைப் புண் ஏற்பட்டவர்கள் வைத்தியசாலைக்குச் செல்வதற்கு ஆட்டோ அல்லது வேறு வானங்களிலேயே செல்ல வேண்டும். அவ்வாறு செல்வதற்கு பெருமளவு நிதிச் செலவும் அவர்களுடன் இன்னொருவர் உதவிக்குச் செல்ல வேண்டிய நிலையும் காணப்படுகின்றது. வறுமை நிலையிலுள்ளவர்களால் உதவியாள் ஒருவரை அழைத்துச் செல்வதென்பதும், ஆட்டோ அல்லது வாகன செலவை செலுத்துவதென்பதும் மிகவும் கடினம்.

இவர்களுக்கு தொடர்ந்து உதவ யாரும் முன்வராத நிலையில் இதுவரை 6 பேர் இறந்துள்ளனர். ஒருவர் வறுமை மற்றும் நோயின் கொடுமை தாங்க முடியாது தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஏனையவர்கள் படுக்கைப் புண் ஏற்பட்டு சீரான மருத்துவ வசதியின்மையினா தொற்றுக்குள்ளாகி இறந்துள்ளனர். படுக்கைப் புண் புழுப்பிடித்து இறந்தவர்களும் உண்டு.

3. இரண்டு கண், இரண்டு கை, இரண்டு கால்கள், ஒரு கையும் ஒரு காலும் இழந்தவர்கள்.

மேற்படி பாதிப்புக்குள்ளானவர்கள் தமது வாழ்வாதாரத்திற்காக சொந்தமாக உழைக்க முடியாதவர்களாகவும், பிறரில் தங்கிவாழ வேண்டியவர்களாகவும் உள்ளனர். இவர்களும் மிகவும் வறுமையான குடும்பங்களைச் சார்ந்தவர்களாக இருப்பதனால் குடும்ப அங்கத்தவர்களால் இவர்களது செலவுகளை ஈடுசெய்யவோ இவர்களுக்கு மூன்று வேளையும் உணவு வழங்கவோ முடியாத நிலையும், இவர்கள் தமது உடைகளை துப்பரவு செய்வதிலும் பெரும் சிரமங்கைள எதிர்நோக்கும் நிலையுமே பெருமளவான குடும்பங்களில் காணப்படுகின்றது.

இதன் காரணமாக பெருமளவான குடும்பங்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களை தமக்குப் பாரமாகக் கருதி அவர்கள் மீது வெறுப்பினை வெளிப்படுத்தும் நிலையே காணப்படுகின்றது.

மேற்படி பாதிக்கப்பட்டவர்களது நிலைமையினை கருத்திற்கொண்டு அவர்களுக்கு தொடர்ச்சியான உதவிகளை வழங்க தங்களால் முடிந்த உதவிகளை வழங்க முன்வருமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பாதிக்கப்பட்டவர்கள் வாழும் பிரதேசம்:- யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை.
பாதிப்பின் தன்மை :-

முள்ளந்தண்டு பாதிப்பு: இடுப்புக்கு கீழ் உணர்வு இழந்தவர்கள், கழுத்துக்குக் கீழ் உணர்வு இழந்தவர்கள். இரண்டு கால்களையும் இழந்தோர். இரண்டு கைகளையும் இழந்தவர்கள். ஒரு காலையும் ஒரு கையையும் இழந்வர்கள்.

தேவையான உதவியின் தன்மை:-

1. அத்தியாவசிய பொருட்களுக்கள் வழங்கல்.

விபரம்

கதற்ரர்
அலகு விலை – 100
தேவை (மாதம்) – 31
தொகை (மாதம்) – 3100

பம்பஸ்
அலகு விலை – 92
தேவை (மாதம்) – 31
தொகை (மாதம்) – 2852

சிறுநீர் வெளியேற்றும் பை
அலகு விலை – 45
தேவை (மாதம்) – 10
தொகை (மாதம்) – 450

இருப்பிடங்கள், உடைகள் சுத்திகரிப்பு மருந்துகள்
தொகை (மாதம்) – 1000

மருந்துச் செலவு – இரண்டு நாட்களுக்கொரு தடவை
படுக்கைப் புண் துப்பரவு செய்து மருந்து
கட்டுவதற்கான மருந்துகள், துணிகள், குளிசைகள்
தொகை (மாதம்) – 1000

தொகை – 8402

வைத்தியசாலை செல்லும் செலவு
உணவு ஃ தேநீர் உடைகள்
நீர்வடிகட்டும் கருவி Filter
துணி துவைக்கும் இயந்திரம் நான்கு சக்கர நாற்காலி

2. மலகூடம் அமைப்பதற்கான உதவி:-

பயனாளிகள் எண் – 25
குடும்பம் ஒன்றுக்கான தொகை(ரூபா) – 250000.00

2.கிணறு அமைப்பதற்கான உதவி

பயனாளிகள் எண் – 30
குடும்பம் ஒன்றுக்கான தொகை(ரூபா) – 250000.00

குறிப்பு: உதவிகள் வழங்க விரும்புபவர்கள் எம்முடன் தொடர்புகொண்டால் பாதிக்கப்பட்டு உதவியை எதிர்பார்த்துள்ள பயனாளிகளது தொடர்பு இலக்கங்களை உங்களுக்கு வழங்கப்படும். அவர்களுடன் நீங்கள் நேரில் தொடர்புகொண்டு அவர்களுக்கான உதவியை நீங்களே நேரில் அனுப்பலாம்.

நன்றி

செ.கஜேந்திரன்
பொதுச் செயலாளர்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி