தமிழத் தேசியக் கூட்டமைப்பு தனது தேர்தல் அறிக்கையை கடந்த 17 ஆம் நாள் வெளியிடப்பட்டபோதும், அதில் சிறீலங்கா அரசு மேற்கொண்ட போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை தொடர்பான வார்த்தைகள் மிகவும் திட்டமிட்ட முறையில் தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வழமைபோல வடக்கு கிழக்கு மாகாணங்களின் இணைப்பு, பிரிக்கப்படாத நாட்டிற்குள் சுயாட்சி அதிகாரம், ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களை நிறைவேற்றும் கோரிக்கைகள், மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகள், காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகள் போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

சிறீலங்காவில் இடம்பெற்றது இனப்படுகொலை என்று அண்மைக்காலமாக அனைத்துலக நாடுகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள், மற்றும் அதிகாரிகள் கருத்துக்களை தெரிவித்துவரும் நிலையில் தமிழத் தேசியக் கூட்டமைப்பு தனது அறிக்கையில் அதனை தவிர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here