சிறீலங்காவில் இடம்பெற்ற தமிழ் இனப்படுகொலையின் முக்கிய பங்காளிகளான சிங்கள அரச தலைவர்களுக்கு ஆதரவாக பிரித்தானியா அரசும் அதன் காவல்துறையும் செயற்பட்டு வருவது தமிழ் மக்கள் மத்தியில் பலத்த கவலைகளையும், பிரித்தானியா அரசின் ஜனநாயகச் செயற்பாடுகள் தொடர்பான சந்தேகத்தையும் தோற்றுவித்துள்ளது.

 
கடந்த வாரம் சிங்கள அரசினால் நியமிக்கப்பட்டவரும் வடமாகாணத்தில் தற்போது இடம்பெற்றுவரும் வாள் வெட்டுக்கள் மற்றும் வழிப்பறிக் கொள்ளைகள் போன்றவற்றை முன்னின்று நடத்திவருபவருமான வடமாகாணத்திற்கான சிங்கள ஆளுனர் கூரே அவர்களும், தமிழின அழிப்பில் முதன்iமாயக திகழ்ந்த சிங்கள அரசியல் கட்சிகளில் ஒன்றான ஐ,தே.காவின் தலைவரும், சிறீலங்காவின் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்காவும் பிரித்தானியா வருகைக்கு தந்திருந்தனர்.

 
அவர்களின் வருகைக்கு எதிராக தமிழ்ழின உணர்வாளர்கள் ஜனநாயக வழியிலான ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

 
ஆனால் அதில் கலங்துகொண்டவர்களை பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் பிரித்தானியா அரசு கைது செய்துள்ளதுடன், சிங்கள இனப்படுகொலையாளர்களுக்கு பாதுகாப்பும் வழங்கியுள்ளது. இந்த செயற்பாடுகளானது போர்க்குற்றவாளிகளுக்கு துணைபோவதாகவே கருதப்பட வேண்டியதாகும்.

 
போர் நிறைவடைந்து 9 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் மேற்குலகமும், பிரித்தானியா அரசும் தமிழ் மக்களின் புனர்வாழ்வு, பாதுகாப்பு, தமிழ் கைதிகளின் விடுதலை, தமிழ் மக்களின் பிரதேசங்களில் இருந்து சிங்கள படையினரை அகற்றும் நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்வதற்கான அழுத்தங்களை சிறீலங்கா அரசு மீது ஏற்படுத்தவில்லை.

 
மாறாக சிங்கள அரசின் போர்க்குற்றங்களை மறைக்கும் நடவடிக்கைகளிலும், தமிழ் மக்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் நடவக்கைகளிலுமே பிரித்தானியா அரசு தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றது.

 
போர்க்குற்றவாளிகளான சிங்கள அரச படையினர் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படையில் பணியாற்றுவதனையிட்டும் பிரித்தானியா அரசு எந்த கருத்தையும் தெரிவிக்கிவில்லை.

 
அதாவது தமிழ் மக்களை தொடர்ந்து ஏமாற்றும் முயற்சிகளையே மேற்குலகமும், பிரித்தானியா அரசும் தொடர்ந்து மேற்கொண்டுவருகின்றன.

 
பிரித்தானியா அரசின் இந்த தமிழ் இன விரோதப்போக்கை ஈழம் ஈ நியூஸ் வன்மையாக கண்டிப்பதுடன், உலகம் எங்கும் பரந்துவாரும் தமிழ் மக்களும், தமிழ் அமைப்புக்களும், தமிழகத்தின் தமிழ்க் கட்சிகளும் தமது எதிர்ப்பையும் கண்டனத்தையும் பிரித்தானியா அரசுக்கு தெரிவிக்கவேண்டும் என ஈழம் ஈ நியூஸ் பணிவாகக் கேட்டுக்கொள்கின்றது.

 
ஈழம் ஈ நியூஸ்.