மக்கள் எழுதுவதே தீர்ப்பு.. “இலக்கிய கும்பல்கள்” எழுதுவதல்ல..

0
567

சிலருக்கு Multiple Personality Disorder அதுதான் அடிக்கடி சில ஞாபகங்கள் வந்து வந்து போகிறது..

புலிகளை எப்படியும் போர்க்குற்றவாளிகளாக்கினால்தான் நடந்தது இன அழிப்பு இல்லை என்று நிருபிக்கலாம் என்ற திட்டத்துடன் சிங்களம் மட்டுமல்ல இந்தியா முதல் மேற்குலகம் வரை படாதபாடு படுகிறார்கள்.

அதற்கு நமக்குள்ளேயே இருக்கிற பலர் மாடாய் உழைக்கிறார்கள்.

தற்போது ஐநா விசாரணை ஒன்றுக்கு முகம் கொடுக்க வேண்டியிருப்பதால் சிங்களம் பழையபடி “புலிகள் மக்களை சுட்டார்கள், மனித கேடயமாகப் பாவித்தார்கள்” என்ற தேய்ந்து போன ரெக்கோட்டை தூசி தட்ட தொடங்கிவிட்டது.

அதற்கு வன்னியில் இருந்து வெளியேறிய நாலைந்து ஏழுத்தாளர்கள் இருக்கினம். அவர்கள் இரத்தசாட்சி, கறுப்பு வெள்ளை, சாம்பல் என்று எழுதிய பல்லவிகளை மொழிபெயர்த்து இனஅழிப்பு அரசு பத்திரமாக வைத்திருக்கிறது. அதில் ஒன்றை இனஅழிப்பு அரசின் புலனாய்வுத்துறை தற்போது உலாவவிட்டிருக்கிறது.

அனந்தி எழிலனின் அரசியலை உடைக்கவும் புலிகளை போர்க்குற்றவாளிகளாக்கவும் என்று ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் நோக்கில் அது பரப்பபட்டுகொண்டிருக்கிறது.

geneva-0988
வன்னியில் அந்த காலப்பகுதியில் சில அசம்பாவிதங்கள் நடந்தது உண்மை. ஆனால் அதன்மேல் பென்னாம்பெரிய பூதக்கண்ணாடியை போட்டு உருப்பெருக்க வைத்திருக்கிறது எமக்குள்ளேயே இருக்கும் ஒரு கும்பல்.

அதை இன அழிப்பு அரசு பயன்படுத்துகிறது.

அடிப்படையில் அவை குற்றங்களே அல்ல. அத்தோடு ஒரு விடுதலைப்போராட்டம் என்ற அடிப்படையில் ஒரு இக்கட்டான சூழலின் விளைவாகவும் தெளிவற்ற தர்க்கங்களின் அடிப்படையிலும் அது கட்டமைக்கப்பட்டுவிட்டதே யதார்த்தம்.

இதன் விரிவான உளவியல்பின்னணியை நீண்ட ஆய்வுக்குட்படுத்தி தர்க்க ரீதியாக புலிகள் மீதான கறையை போக்கும் வண்ணம் ஒரு உளவியலாளர் குழுவினால் நிறுவப்பட்டுள்ளது. அதை விரைவில் ஒரு நூலாக வெளியிட இருக்கிறார்கள். இது ஒருபக்கம் இருக்கட்டும்.

சம்பந்தபட்ட மக்கள்தான் எதையும் முடிவு செய்யவேண்டும். எந்த ஆய்வும் தர்க்கங்களும் சொல்ல முடியாத விளக்கத்தை மக்களால் எழுத முடியும்.

இந்த “சுட்டகதை, அடித்த கதை” தொடர்பாக மக்கள் தமது தீர்ப்பை எப்போதோ எழுதிவிட்டார்கள்.

கடந்த வடமாகாண சபை தேர்தலின்போது அந்த “தீர்ப்பு” எழுதப்பட்டுவிட்டது.

எந்த மக்களை புலிகள் சுட்டார்கள், பணயக்கைத்திகளாக பிடித்து வைத்திருந்தார்கள் என்று உளறினார்களளோ எந்த மக்களை சாட்சிகளாக வைத்து புலிகளை கழுவி ஊத்தினார்களளோ அந்த மக்கள் அதே வன்னி மண்ணில் “பிரபாகரன்” என்ற பெயரை தேர்தல் பிரச்சார கூட்டங்களில் கேட்டவுடன் வானதிர கோசமிட்டு எல்லோரினதும் முகத்தில் கரியை பூசினார்கள்.

சிவில் உடையுடன் தம்மை சிங்களம் கண்காணிப்பது குறித்து கூட அவர்களுக்கு கவலையில்லை. தமது உறுதியையும் உளவியலையும் தாம் யாரின் பின் அணிவகுத்து நிற்கிறோம் என்ற செய்தியை தெளிவாக எடுத்துரைத்தார்கள்.

“அரிசி பருப்பு தருகிறோம், வீடு நிலம் தருகிறோம் ” என்று கூட்டமைப்பு வன்னி மக்களிடம் வாக்கு கேட்கவில்லை.

“பிரபாகரன் மாவீரன், துயிலுமில்லங்களை மீள அமைக்கிறோம்,மாவீரர்களின் சாட்சியாக நிற்கிறோம்” என்று தான் வாக்கு கேட்டார்கள்.

“பிரபகாரனுக்கு பின்னான அரசியல் என்று ஒன்றில்லை. பிரபாகரனையும் புலிகளையும் தம்மையும் வேறுபடுத்தும் ஒரு அரசியல் என்று ஒன்றில்லை” என்பதை மக்கள் அன்றே நிருபித்துவிட்டார்கள்.

யாரை ஏமாற்ற இன்னும் இந்த பம்மாத்துக்கதைகளை காவ எத்தனிக்கிறது ஒரு கும்பல்.

மக்கள் தீர்ப்ப வழங்கிய பிறகு நாம் இனி யார் குறித்தும் அக்கறைப்படத்தேவையில்லை..

இது மக்களின் போராட்டம்… மக்களுக்கான போராட்டம்…

எனவே மக்கள் எழுதுவதே இறுதியும் அறுதியுமான தீர்ப்பு.. அதை விடுத்து இனக்கொலையாளர்களும் அவர்களுக்கு வக்காலத்து வாங்கும் கும்பல்களும் எழுதுவதல்ல…

ஈழம்ஈநியூஸ்.