மனிதவுரிமைகளுக்குச் சவால் விடும் சிங்கள இனவெறி அரசை, தீர்மானங்களால் திருத்தவே முடியாது!- பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை

0
602

france-demoசிங்கள இனவாத அரசின் கொடுங்கரங்களுக்குள் சிக்கியுள்ளார்கள் பாலச்சந்திரன் ஜெயக்குமாரியும் அவரது மகள் விபுசிகாவும். வழமைபோல கடத்தப்பட்டு பின்னர் கைதுசெய்யப்பட்டதாகஅறிவிக்கப்பட்டனர். இப்பொழுது தாயும் மகளும் பிரிக்கப்பட்டு தாயார் பூசா தடுப்பு முகாமிற்கும் மகள் விபுசிகா வவுனியா அன்பகம் சிறுவர் இல்லத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டடுள்ளனர்.

காணாமல் போக்கடிக்கப்பட்டவர்களையும், அரசியல் சிறைக்கைதிகளையும் விடுவிக்கக்கோரி, தாயகத்தில் இடம்பெற்று வந்த போராட்டங்களில் முன்னணியில் நின்று மிகவும் உருக்கமான முறையில் குரல் கொடுத்து வந்தவர்கள் என்பதுதான் அவர்கள் செய்த பெரும் குற்றம்! காணாமல் போன தனது சகோதரர்களை தேடியலைந்து கதறியழுத குற்றத்திற்காக போரில் எஞ்சிய தனது ஓரே உறவான தாயையும் பிரிந்து வாழவேண்டிய அவல நிலையினை 13 வயதே நிரம்பிய விபுசிகாவுக்கு வழங்கியிருக்கிறது சிங்கள அரசு!

திருகோணமலையில் வைத்து இன்னுமொரு இளம் தாயாரான பாலகுருபரன் தர்மிலா என்னும் சகோதரியும் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நான்கு அகவையுடைய குழந்தையின் தாயாராக இருப்பதோடு ஏழு மாதக் கருவினைச் சுமந்த நிலையிலும் படைத்தரப்பினரினது கைகளில் சிக்கியுள்ளார்.

இதேவேளை முக்கிய மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்களான றுக்கி பெர்னாண்டோ மறறும் அருட்தந்தை பிரவிண் ஆகியோர் பயங்கரவாதக் குற்றத்தடுப்புப் பிரிவினரால் கிளிநொச்சியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐ. நா மனிதவுரிமைகள் அவையில் சிறிலங்காவக்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவது தொடர்பில் வாதப் பிரதிவாதங்கள் அதைதுலக மட்டத்தில் இடம் பெற்று வரும் தருணத்தில் சர்வதேச சமூகத்திற்கு சவால் விடும் வகையில் மனதவுரிமைகளை மீறும் அடாவடித்தனங்களில் சிங்கள அரசு இறங்கியுள்ளது. தீர்மானங்கள் போதுமானதல்ல தமிழர்களுக்கு உயிர்ப் பாதுகாப்பினை வழங்கிட, இனியும் காலம் தாழ்த்தாமல் ஐ.நா நடவடிகையில் இறங்கவேண்டும்! என்பதை வலிறுத்தி சனநாயக வழிப்போராட்டங்களை நாம் இன்னும் தீவிர்ப்படுத்தவேண்டும்

தாயகத்தில சனநாயக வழிமுறையிலும் தமிழர்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடும் ஒரு துளிவாய்ப்பினைக கூட கொடுத்துவிடக்கூடாது அதனை நசுக்கிவிடவேண்டும் என்பதற்காகவும் காணமல் போனவர்களைத்தேடி அலையும் உறவுகளை அச்சத்தில உறையவைத்து அவர்களது முயற்சிகளை கைவிடச்செய்வற்குமாகவே சிங்கள அரசு சுற்றிவளைப்புகளிலும் கைதுகளிலும் தீவிரமாக இறங்கியுள்ளது.

தாயகத்தில் நடைபெற்றுவரும் சனநாயக வழிமுறையிலான போராட்டங்களை சிங்கள அரசு நசுக்கி இல்லாதொழிக்க தீவிரமாக இறங்கியுள்ள இன்றைய சூழலில் விரைந்து உடனுக்குடன் அனைத்துல சமூகத்துக்குச் அதனை அறியச்செய்திட வேண்டிய பெரும்பொறுப்பு புலம் பெயர் தமிழர்களாகிய எமக்குண்டு. தாயகத்தில் நடைபெற்று வரும்போராட்டங்களுக்குப் பாதுகாப்பு அரணாக இருந்து செயற்படவேண்டியவர்களும் நாங்களே! குரல் மறுக்கப்பட்ட எங்கள் உறவுகளுக்காக குரல்கொடுக்க வேண்டியது எங்கள் கடமை!

சிங்கள அரசின் கொடுங்கரங்களில் சிக்கியுள்ள எங்கள் உறவுகளையும் மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்களையும் மீட்க ஒன்றிணைந்து குரல்கொடுப்போம் வாரீர்!

தனது அண்ணனைத்தேடி கதறியழுது, மனிதநேயமுள்ள அனைவரது நெஞ்சங்களையும் கலங்கடித்த விபுசிகாவினை அவளது தாயாரோடு சேர்ப்பதற்காக குரல் கொடுப்போம் வாரீர்!

ஊடகப்பிரிவு

பிரான்சு தமிழிழ மக்கள் பேரவை