மழை புகைப்படக் கருவியை சுமந்தவளை – இன்று காணொளிகள் சுமக்கின்றன..!

0
659

isaipriya9அன்றொரு நாள்…
நடந்த பிரிவின் வலியை
இன்றும்
ஈரமாக்கிக் கொள்கிறது – மழை
புகைப்படக் கருவியை
சுமந்தவளை – இன்று
காணொளிகள் சுமக்கின்றன..!
கண்ணீர்க் கடலாக
ஊர்த் தெருக்களில்
அலைந்து திரியும்
சீருடை தரித்த
காமப் பிசாசுகள் -யாரைப்
பார்த்தாலும்
இசைப்பிரியவை
இழுத்து செல்லும்
காமவெறியனாகவே
கண்கள் எரிகின்றது

..

அவள் உதடுகளைக்
கிழித்துப் போட்டு
பெண் உடலின்
ஊண் அருந்தி
தாகம் தீர்க்க…
செந்நீரும் குடித்து
மனிதாபிமானத்தை
உண்டும்.
கொழுத்தும்.
சீருடை தரித்து
சாத்தான்களாக….
.எம் ஊர் தெருக்களில்
புதைகுழியும்..
மணல் மேடும்
கடல் நீரும்…
சதுர்பு நிலங்களும்
தோழிகளின் குருதியால்
நிரம்பிய பின்பும்…
எம் ஊரின் பாதுகாப்பாய்…
அந்தப்
பெண் திண்ணிக் கழுகுகள்.

-மிதயா கானவி (சகோதரி)