அண்மையில் நடந்து முடிந்த இலங்கை அதிபர் தேர்தல் நடைபெற்று, வாக்குகள் எண்ணப் பட்டுக் கொண்டிருந்தபோது, தேர்தல் முடிவுகள் ராஜபக்சாவுக்கு சாதகமாக வராமை கண்டு, ராஜபக்சா இலங்கையில் இராணுவ ஆட்சியை ஏற்படுத்தவும், எதிர்க் கட்சி வேட்பாளராகிய மைத்திரியை மட்டுமன்றி, ரணில் விக்கிரமசிங்கா, சந்திரிகா,முன்னாள் இராணுவத் தளபதி.உட்பட பல முக்கியஸ்தர்களை கைது செய்து சிறையில் அடிக்கவோ,அல்லது அவர்களை மண்டையில் போடவோ முயற்சித்தார் என்னும் தகவல்.

ஆளும் கட்சிக்கு சென்றுவிட்டது..ஆனால்..அவரின் விருப்பத்துக்கு தேர்தல் ஆணையாளரும்..இலங்கை இராணுவமும் செவி சாய்க்காமல் விட்டதால்தான் அது சாத்தியம் அற்றுப் போய் விட்டதாம்..!

mahi-last
அதன் விளைவாக புதிய அமைச்சரவையை கொண்ட ஓர் விசாரணைக் குழு..ராஜபக்சாவையும்..அவரோடு சம்பந்தப் பட்ட சிலரையும் மிக விரைவில் விசாரணை செய்யவுள்ளது! என்பதை புதிய அரசின் தகல் தொடர்பு அமைச்சரான மங்கள சமரவீர.இன்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

1971இல் சேகுவேரா என்ற அன்றைய பெயருடைய(ஜனதா விமுக்தி பெரமுனை) சிங்கள அமைப்பு.

அப்போதைய இலங்கைப் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டார நாயக்காவின் ஆட்சியை கவிழ்க்க சதி செய்தது மட்டுமன்றி இலங்கையின் சில இடங்களில் ஆயுத தாக்குதலிலும் ஈடுபட்டது. அப்படி ஈடுபட்டவர்களில் சுமார் பத்தாயிரம் இளைஞர்கள் வரை அன்றைய. சிறிமா அம்மையாரின் அரசால் கைது செய்யப்பட்டு.காதும் காதும் வைத்ததுபோல் கொன்று குவிக்கப் பட்டார்கள் என்ற தகவல் அநேகம் பேருக்கு தெரியாது. தெரிந்தவர்களுக்கும் இன்று அது மறந்து போயிருக்கும்.

ராஜபக்சா வெளிப்படையாகவே சந்திரிகாவுக்கு பல இன்னல்களை ஏற்படுத்தியவர் என்பதுடன்..ரணில் மற்றும்….முன்னாள் இராணுவத் தளபதி ஆகியோரும் அவரால் மிகவும் பாதிக்கப் பட்டவர்கள் ஆகும்..அவர்களே இன்றைய புதிய அரசை நிறுவ மைத்திரிக்கு வலது கரமாக இருந்து செயல் பட்டவர்கள் என்பதால். பழிக்குப் பழி வாங்கடா. பழிகாரப் பாண்டியனே என்ற பழமொழிபோல் ராஜபக்சா மிக விரைவில் விசாரிக்கப் படவுள்ளார். விசாரணையின் பெறுபேறுகளைப் பொறுத்து….அவர் கைது செய்யப் படலாம்?

பதவியை காப்பாற்ற சிங்களவர்கள் எதையும் செய்வார்கள் என்பதை நாம் அறிவோம். அதனால் இராணுவ விசாரணையில் ராஜபக்சாவுக்கு சில வேளை எதுவும் நடக்கலாம்? மைத்திரி ஓர் நிறை வேற்று அதிகாரம் கொண்ட அதிபர் என்பது நமக்கு தெரிந்த ஒன்றே.

ராஜபக்ச உயிருடன் இருந்தால்.. மூட்டைப் பூச்சிபோல் தம்மை குத்திக் கொண்டே இருப்பார் என்பது எல்லோருக்கும் தெரியும். சிலவேளை இன அழிப்பு பேய்க்கு கொழும்பில்தான் தூக்கு கயிறு தயாராகுமோ தெரியாது? பொறுத்திருந்து பார்ப்போம்.

‘ஊர் இரண்டுபட்டால்…கூத்தாடிக்கு கொண்டாட்டம் ‘ என்று ஓர் பல்லி என் வீட்டு மூலையில் இருந்து சொல்லிக் கொண்டிருக்கிறது அட யதார்த்தப் பல்லியே நீ வாழ்க.

வெளிச்ச வீடு.