எதிர்வரும் மே 18ம் திகதி பிரித்தானிய தமிழர் பேரவையினால் மத்திய லண்டனில் முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் 6ம் ஆண்டு நினைவு தினம் மாலை 4 மணியில் இருந்து 8 மணிவரை ஏற்பாடு செய்யப்பட்டு எழுச்சியுடன் நினைவு கூரப்பட உள்ளது.

Mullivaikkaal2015-4
ஸ்ரீலங்கா இனவாத அரசுகளினால் கடந்த 67 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையின் உச்சக்கட்டமாக 18,05,2009 அன்று வரை முள்ளிவாய்க்காலில் 70,000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டும், 80,000 மேற்பட்ட தமிழ் பெண்கள் விதவைகள் ஆக்கப்பட்டும், 25,000 திற்கும் மேற்பட்ட சிறார்கள் அனாதைகள் ஆக்கப்பட்டும், மேலும் 146,679 தமிழ் அப்பாவி இளைஞர்கள், யுவதிகள், பெண்கள், என பலர் கடத்தப்பட்டும் காணாமல் போயுமுள்ளனர்.

ஆட்சி மாற்றத்துடன் நீதிக்கான பயணம் நீர்த்துப் போகுமா?

சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட பல்லாயிரம் அரசியல் கைதிகள் எங்கே?

146 679 தமிழர்களின் கதி என்ன?

70 000 மக்களின் படுகொலைச் சூத்திரதாரிகள் தப்பித்து கொள்வார்களா?

67 வருட இன அழிப்பினை சர்வதேசம் மறைத்து விடுமா?

நீதி கேட்டு மாபெரும் எழுச்சிப் பேரணி அலைகடலெனத் திரள்வோம் 18 மே 2015,

மீண்டும் ஒருமுறை அனைத்து தமிழ்மக்களும் எழுச்சியுடன் அணி திரண்டு வாருங்கள்.

ஒன்றுபடுவோம்! அணி திரள்வோம்! தமிழின அழிப்பிலிருந்து எமது தாயாக மக்களைக்காப்போம்!

அணிதிரண்டு வாருங்கள்.

முள்ளிவாய்க்கால் விளம்பரம்

://www.youtube.com/watch?v=Q6SPhPQii7E

இடம்: மத்திய லண்டன்

பிரித்தானிய தமிழர் பேரவை

தொடர்புகளுக்கு 02088080465, 07533381189,07943100035