முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறக்கப்பட்டது

0
723

mulli-tn-1உலகத் தமிழர் பேரமைப்பு அறக்கட்டளையின் சார்பில் தஞ்சாவூர் விளார் சாலையில்.

அமைக்கப்பட்டிருக்கும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இன்று காலை பத்தரை மணியளவில் மொழிப் போர் மறவர் திரு. ம. நடராசன் அவர்கள் தலைமையில் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் திரு. பழ. நெடுமாறன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

பின்னர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த திரு. பழ. நெடுமாறன், முற்றத்தின் திறப்புக்கு பல்வேறு வகைகளில் முட்டுக்கட்டைகள் போட முயன்ற மத்திய அரசையும் அதற்கு துணை நின்ற மாநில அரசையும் கடுமையாக கண்டித்தார்.
mulli-tn4
அத்துடன் முன்னதாக அறிவித்தபடி திறப்பு நிகழ்ச்சியை ஒட்டிய நிகழ்வுகள் எதிர் வரும் 8, 9, 10 தேதிகளில் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் கூறினார்.