மே 18 இற்கு பிறகு இலங்கைக்கு செல்வதற்கு என்று சில நிபந்தனைகள் இருக்கின்றன

0
611

கவிஞர் ஜெயபாலன் “கைதின்” போது எழுதியது இது. தற்போது மகாபிரபாகரன் கைது செய்யப்பட்டுள்ளதால் சில திருத்தங்களுடன்…

மே 18 இற்கு பிறகு இலங்கைக்கு செல்வதற்கு என்று சில நிபந்தனைகள் இருக்கின்றன. தமிழர்களுக்கு மட்டுமல்ல வெளிநாட்டவர்களுக்கும் இது பொருந்தும். முதலில் வெனிநாட்டவர்களுக்கு வருவோம்.

ஊடகவியலாளர்கள், மனிதஉரிமையாளர்கள் பலருக்கு இலங்கைக்குள் நுழைய தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. மீறி வேறு வகையில் நுழைந்தவர்கள் தடுத்து வைக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

பொதுநலவாய மாநாட்டு தருணத்தில் கூட அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த இரு ஊடகவியலாளர்கள் நாடு கடத்தப்பட்டனர். அவ்வளவு ஏன் நியூசிலாந்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் கூட நாடுகடத்தப்பட்டார். இதுதான் யதார்த்தம்.

இனி இலங்கைக்குள் நுழைய விரும்பும் தமிழர்களின் நிலையை பார்ப்போம்.

இனப்படுகொலை அரசுடன் அல்லது அதன் அடிவருடிகளுடன் தொடர்பு ஏற்படுத்துபவர்களும் அல்லது வெறும் சடங்காக எந்த வித அரசியல் விமர்சனமும் இன்றி சென்று வருபவர்களுக்கு மட்டுமே “கட்டுநாயக்கா” கதவு திறக்கும். மீறி செல்வது கடினம். மே 18 இற்கு பிறகு புலத்தில் இருந்து போய் வருபவர்களின் பட்டியலை தொகுத்தாலே இது புரியும்.

இதுதான் யதார்த்தம்.

கோத்தபாய கூப்பிடுகிறார், டகளஸ் கூப்பிடுகிறார், கேபி கூப்பிடுகிறார், தமிழ் இலக்கியவாதிகள் கூப்பிடுகிறார்கள், வடக்கின் வசந்தம், கிழக்கின் வசந்தம் பாருங்கள் என்று அலலேலுயா கூட்டங்களுக்கு கூப்பிடுவதுபோல் பல இனஅரசின் அடிவருடிகள் கூப்பிடுவதை நம்பி புறப்பட்டு போய் விடாதீர்கள். களி Confirm.

ஊடகவியலாளர்கள், படைப்பாளிகள் என்றால் ஒரு பொதுக்கவனத்தை ஏற்படுத்தி ஒரு மாதிரி மீட்டுவிடலாம். இல்லேயேல் முள்ளிவாய்க்கால் கணக்கோடு கணக்காக போய்விடவேண்டியதுதான்.

ஒரு நிபந்தனைதான் அதை இறுக்கமாக கடைப்பிடித்தால் நீங்கள் போய் திரும்பிவரலாம்.

“எல்லாவற்றையும் பொத்திக்கொண்டுபோய் பொத்திக்கொண்டே திரிந்து பொத்திக்கொண்டே திரும்பவேண்டும்.”

-பரணி, முகநூல்