வரலாற்றுக் காலம் தொட்டு தற்போதைய காலம் வரையிலான காலகட்டத்தில் மிகவும் மோசமான மனிதர்கள் பட்டியலில் ராஜபக்ச சகோதரர்கள் இடம்பிடித்துள்ளனர். தற்போதைய நிலைவரப்படி இதில் ஸ்டாலின் முதலிடத்திலும், ராஜபக்ச 13வது இடத்திலும் உள்ளனர்.
இந்த மோசமான மனிதர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார் ரஷ்யாவின் ஸ்டாலின். 2வது இடத்தில் ஹிட்லர் இருக்கிறார்.

ரேங்கர் என்ற இணையதளம் இதுதொடர்பான ஒரு கருத்துக் கணிப்பை நடத்தி வருகிறது.

அதில் பலரும் ஒன்லைன் மூலம் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு வாக்களித்து வருகின்றனர்.

தற்போதைய நிலவரப்படி இதில் ஸ்டாலின் முதலிடத்திலும், ராஜபக்சே 13வது இடத்திலும் உள்ளனர்.

mahi
வரலாற்றிலேய மிகவும் மோசமான, அதி மோசமான, பயங்கரமான, சர்வாதிகரமான மனிதர்களை இதில் பட்டியலிட்டுள்ளதாக இந்த இணையதளம் கூறுகிறது.

இந்தப் பட்டியலில் மக்களைக் கொன்று குவித்த சர்வாதிகாரிகள், மனநல பாதிப்பால் தொடர் கொலைகளைச் செய்தவர்கள், மதத் தலைவர்கள், கொடூரமான அரசியல்வாதிகள், பிரபலங்கள், நடிகர்கள் என பலரும் இணைக்கப்பட்டுள்ளனர்.

இதில் யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் பரிந்துரைக்கலாம். வாக்களிக்கலாம். உலகின் மிகவும் மோசமான மனிதராக, முதலிடத்தைப் பிடிக்கும் நபர் அறிவிக்கப்படுவார்.

ரஷ்யாவின் மறைந்த தலைவர் ஜோசப் ஸ்டாலின் இதில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். 2வது இடத்தில் ஜெர்மனியின் மறைந்த சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர் இடம்பெற்றுள்ளார்.

லட்சக்கணக்கான யூதர்களைக் கொன்று குவித்தவர் ஹிட்லர். அதேபோல சர்வாதிகாரி போபல்பாட் தற்போது 3வது இடத்தில் இருக்கிறார். இடி அமீன் 4வது இடத்தில் இருக்கிறார். அல் கொய்தா நிறுவனர் ஒசாமா பின்லேடன் 5வது இடத்திலும், சீனத்து மா சே துங் 6வது இடத்திலும் உள்ளனர்.

வட கொரியாவின் கிம் ஜோங் இல் 7வது இடத்தில் இருக்கிறார். ஹெய்ன்ரிச் ஹிம்ளர் 8வது இடைத்தைப் பிடித்துள்ளார்.அமெரிக்காவில் பிடிக்கப்பட்டு தூக்கிலிட்டுக் கொல்லப்பட்ட ஈராக் தலைவர் சதாம் உசேன் 9வது இடத்தைப் பிடித்துள்ளார்.10வது இடத்தில் இத்தாலி சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினி இருக்கிறார்.

இலங்கையின் இனப் படுகொலை சர்வாதிகாரி ராஜபக்சவுக்கு 13வது இடம் கிடைத்துள்ளது. இவர் வேகமாக மேலே வந்து கொண்டிருக்கிறார் என்பது நினைவிருக்கலாம்.

ராஜபக்சேவின் தம்பி கோத்தபாயவுக்கு இந்தப் பட்டியலில் 25வது இடம் கிடைத்துள்ளது.

சோனியா காந்தியையும் இந்தப் பட்டியலில் சேர்த்துள்ளது ஆச்சரியம் தருகிறது. அவர் 29வது இடத்தில் இருக்கிறார்.

கலைஞர் கருணாநிதி” – இந்தப் பெயர் 31வது இடத்தில் இடம்பெற்று மேலும் ஆச்சரியப்படுத்துகிறது.

நம்ம சுப்பிரமணியம் சுவாமிக்கும் கூட இங்கு இடம் கிடைத்துள்ளது. இவருக்குக் கிடைத்துள்ள இடம் 34 ஆகும்.

ராஜபக்சேவின் இன்னொரு தம்பியான பசில் ராஜபக்ச 48வது இடத்தில் இருக்கிறார். பல ஆயிரம் கோடி சொத்துக்களை இவர் குவித்துள்ளதாக அதில் குறிப்புள்ளது.

ராஜபக்சேவை இந்த இணையதளத்தில் கழுவிக் கழுவி ஊற்றியுள்ளனர். மிகவும் மோசமான மனிதராக திகழும் ராஜபக்சவை பட்டியலில் முதலிடத்தில் வைக்க வேண்டும் என்று பலரும் விரும்புவதாகவும் இணையதளம் கூறியுள்ளது.

ஒரு நபர் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட நபர்களுக்கு வாக்கு அளிக்கமுடியும்.
http://www.ranker.com/crowdranked-list/the-all-time-worst-people-in-history?page=7