வடமாகணசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது

0
583

obama-tamilவடமாகண சபையானது கடந்த 27 தை 2014 அன்று இலங்கையில் நடைபெற்ற போரில் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி விசாரணை தேவை என தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. LLRC யை புறக்கணித்து சர்வதேச நீதி விசாரணை வேண்டுமென்றும் மேலும் மன்னாரில் தொடர்ந்தும் தோண்டப்பட்டு வரும் மனிதப்புதைகுளி பற்றியும் சர்வதேச விசாரணை தேவை எனவும் கூறப்பட்டுள்ளது. இது பற்றி நேரடியாக UNHRC கூட்டத்தில் பேசுவதற்கு திருமதி அனந்தி சசிதரன் அவர்களையும் தமது பிரதிநிதியாக அனுப்ப முடிவு செய்துள்ளது.

இத் தீர்மானம் பற்றி கருத்து தெரிவித்துள்ள ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கருத்து தெரிவிக்கையில் இனவழிப்பும் அதற்கான சர்வதேச விசாரணை பற்றி பலரும் முன்னர் வலியுத்தி வந்தபோதும் தற்போது வடமாகாணசபையில் தீர்மானமாக அரச நிர்வாகத்திலேயே கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் அன்றைய தினம் பல தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதில் ஒன்று இலங்கை தீவில் இனப்படுகொலையை ஒத்த படுகொலை நடைபெற்றிருக்கின்றது என்பதை தெரியப்படுத்தியும் உள்ளது.

மற்றொரு தீர்மானத்தில் வடகிழக்கு மக்கள் இலங்கை அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் எந்த விசாரணைகளிலும் நம்பிக்கை வைக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளமையானது கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்கத்துக்குமான ஆணைக்குழுவை மறைமுகமாக நிராகரிப்பதாகவே அமைகின்றது.

மேலும் கருத்து தெரிவித்துள்ள ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பின் செய்தித் தொடர்பாளர், இத்தீர்மானமானது மிகவும் துணிச்சலுடனும், தீர்க்கமாகவும் எடுக்கப்பட்ட தீர்மானம் ஆகும். இதற்காக தமது மனமார்ந்த நன்றிகளை வடமாகாண சபைக்கு தெரிவித்துக்கொண்டுள்ளனர்.