வரலாறு காணாத வகையில் ஜெனிவாவில் பெருந்திரளான மக்கள் பங்கேற்பு

0
542

ஐ.நா முன்றலை அதிர வைத்த மக்கள் எழுச்சி! இலங்கையில் திட்டமிட்டு நடாத்தப்பட்ட இன அழிப்பிற்கு சுயாதீன விசாரணை வேண்டும் என உலகின் பல பாகங்களில் இருந்து ஐ.நா முன்றலில் ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளம் போல் திரண்டு வந்தனர்.

geneva11-3-14-1
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் 25வது கூட்டத் தொடர் நடந்து கொண்டிருக்கும் நிலையில், கடந்த காலங்களில் இலங்கை அரசால் தமிழ் மக்கள் மீது நடாத்தப்பட்ட இன அழிப்பிற்கு நியாயமான சர்வதேச விசாரணை வேண்டும் என வலியுறுத்தி உலகின் பல பாகங்களில் இருந்து மக்கள் திரண்டு வந்து பெரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தினர்.இவ்வார்ப்பாட்டத்தில், ஐ.நாவின் முன்னாள் உதவிச் செயலாளர், தமிழ் இன உணர்வாளர் புகழேந்தி தங்கராஜா ஆகியோர் பங்குபற்றியுள்ளனர்.

இதனிடையே ஈழத்தமிழர்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதிகேட்டு ஆயிரக்கணக்கில் ஜெனீவாவில் உள்ள ஐ.நா முன்றலில் கூடியது பெரும் நம்பிக்கை அளிக்கிறது. பல ஐரோப்பிய நாடுகளில் இருந்து தமிழர்கள் தங்கள் தாயகம் காக்க மீட்க இவ்வாறு ஆண்டுதோறும் ஒன்று கூடி தங்கள் இன ஒற்றுமையை உலகிற்கு காட்டுன்றனர். தாங்கள் தனித்துவமான தேசிய இனம் என்பதையும், விடுதலைப் புலிகள் தான் தங்கள் ஏகப் பிரதிநிதி , தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் தான் தங்கள் தலைவர் என்பதையும் மீண்டும் ஒரு முறை ஆணித்தரமாக பறைசாற்றயுள்ளனர் உலகத் தமிழர்கள்.

geneva11-03-14
தமிழீழம் இன்று இல்லையேல் நாளை நிச்சயம் மலரும் , என்ன விலைக் கொடுத்தேனும் அதை மீட்போம் , உலகத் தமிழர்கள் நாங்கள் ஓய்ந்துவிடவில்லை , நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம் என்ற செய்தியை உலக நாடுகளுக்கு கொடுத்துள்ளனர் தமிழர்கள். தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பே ஐ.நா விடம் தாங்கள் வைக்கும் கோரிக்கை என்று முழக்கமிட்டுள்ளனர். தமிழர்களின் தாயகத்தை சிங்களர்வர்களுக்கு எந்த சூழ்நிலையிலும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்பதையும் சிங்கள அரசுக்கு எடுத்துக் கூறியுள்ளனர்.

தமிழர்களின் இப்படியான தன் எழுச்சிப் போராட்டங்களை இந்தியா போன்ற நாடுகள் மதிக்கக் கற்றுக் கொள்ளவேண்டும். தமிழர்களின் நியாயமான உணர்வுகளை மதித்து தமிழர்களுக்கு ஆதரவான, ஆக்கப்பூர்வமான நிலைப்பாட்டை இந்தியா ஐ.நாவில் எடுக்க வேண்டும் என்பதே தமிழகத் தமிழர்களின் விருப்பமாகும். இதை இந்தியா இப்போதும் செய்யாவிட்டால் வரலாறு இந்தியாவை மன்னிக்காது. தமிழகத்தில் தோன்றியுள்ள இந்திய எதிர்ப்பு மேலும் வலுவடையும். இது இந்திய அரசு தன் கையை வைத்து தானே குத்திக் கொள்வதற்கு சமமாகும். இந்தியாவோடு தமிழகம் இணைந்திருக்க வேண்டுமென்றால் ஐ.நாவில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான நியாயமான தீர்மானத்தை இந்திய அரசு கொண்டுவர வேண்டும். இலங்கையை காப்பாற்றும் நடவடிக்கையில் இனிமேலும் ஈடுபடக்கூடாது.

geneva-11-3-14-9
இப்போராட்டத்தில் தமிழகத் தமிழர்கள் சார்பில் கலந்துகொண்ட இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் அவர்களுக்கும் நம் வாழ்த்துகள் என தமிழகத்தைச் சேர்ந்த இராஜ்குமார் பழனிச்சாமி என்பவர் தொர்வித்துள்ளார்

இவ்வார்ப்பாட்டத்தினை தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாடு செய்தமையும் குறிப்பிடத்தக்கது.
geneva-11-3-14-7