4 ம் மாடியில் சித்திரவதை செய்யப்படும் கர்ப்பிணிப் பெண் : உலகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்வோம் !!

0
519

tharmilaதிருகோணமலை பாலையூற்றுப் பிரதேசத்தில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் சிறீலங்காப் புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டுவதைகளுக்கு உட்படுத்தப்படுவதாகத் செய்திகள் வெளியாகியுள்ளன. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் பாலையூற்றைச் சேர்ந்த நான்குவயதுப் பிள்ளையின் (மகன்) தாயாரும் கர்ப்பிணியுமான பாலகுருபரன் தர்மிலா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தாயகத்தில் வாழும் உறவுகளுடைய குரல்கள் சிங்கள பேரினவாத்தினுடைய ஆயுதங்களினால் மௌனிக்கப்பட்டுள்ளது. ஆகையால் புலம்பெயர் தேசங்களில் சனநாயகவழியில் தமிழர்களின் உரிமையைவென்றெடுக்க புலம்பெயர் தமிழர்கள் தொடர்ச்சியாக பல்பேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்கள்.

அந்தவகையில் தமிழினவழிப்பிற்கு நீதிகோரி ஜெனீவா நோக்கி தமிழர்களால் முன்னெடுக்கப்பட்ட நீதிக்கான பயணத்திற்கு ஆதரவு வழங்கும் துண்டுப் பிரசுரங்கள் தாயகத்திலும் சில இளைஞர்களால் வழங்கப்பட்டுள்ளன. குறித்த துண்டுப் பிரசுரத்தில் தமிழினப் படுகொலைக்கு நீதிகோரியும், அனைத்துலக விசாரணை தேவை எனவும் ஜெனீவாவில் நடைபெறும் சனநாயக போராட்டங்கள் வெற்றி பெறவும் அவர்கள் வாழ்த்துக்களையும் ஆதரவையும் வெளிப்படுத்தியிருந்தனர்.

புதன்கிழமை காலை 1 மணியளவில் துண்டுப்பிரசுரங்கள் வழங்கிய நான்கு இளைஞர்களின் வீடுகளுக்குச் சென்ற சிங்களப் புலனாய்வாளர்கள் அவர்களைக் கைது செய்துள்ளார்கள். கைதுசெய்யப்பட்ட இளைஞர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் துண்டுப்பிரசுரங்கள் வழங்கிய சம்பவத்தில் ஐந்தாவதாகவும் ஒருநபர் தொடர்வுப்பட்டுள்ளார், அவர் தற்சமயம் தலைமறைவாக உள்ளார். தலைமறைவாக உள்ளவரின் துணைவியாரே திருகோணமலை பாலையூற்றுப் பிரதேசத்தில் சிறீலங்காப் புலனாய்வாளர்களால் கைதுசெய்யப்பட்டு வதைகளுக்கு உட்படுத்தப்படுவதாகத் செய்திகள் வெளியாகியுள்ளன.

தலைமறைவாகவுள்ள நபர் சரணடையும் வரை அவரது துணைவியாரை தடுத்து வைத்திருப்போமென சிறீலங்காப் புலனாய்வாளர்களால் கர்ப்பிணிப் பெண்ணின் தந்தையாரிடம் அறிவித்துள்ளார். தமிழர்களின் உரிமைக்காக சனநாயக வழியில் போராடி தலைமறைவாகவுள்ள நபரை சிங்கள பேரினவாதமும் சிறீலங்காப் புலனாய்வாளர்களும் சிங்கள ஊடகங்களும் தேசத்திற்கு ஆபத்தான நபர் என்றும் மனநோயாளர் என்றும் கூறிசமுகத்தில் இருந்து ஒதுக்கின்ற நடவடிக்கையில் திட்டமிட்டு செயற்படுவதை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.