தமிழினத்தின் மீது முதலாவது பாரிய இனப்படுகொலை இங்கினியாகலவில் ஜுன் 5‚ 1956 இல் சிங்கள ஆயுதப் படைகளால் நிகழ்த்தப்பட்டது. கல்லோயத் திட்டத்தின் கீழ் குடியேற்றப்பட்ட சிங்களக் காடையினராலும் ஆயுதப் படையினராலும் (பட்டிப்பளை) இங்கினியாகலவில் பூர்வீகமாக வாழ்ந்து வந்த 150 இற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.

படுகொலை செய்யப்பட்டவர்களும் காயமடைந்தவர்களும் எரிக்கப்ட்டு தடயமின்றிச் செய்யப்பட்டார்கள். தாசி விதாச்சி தனது “அவசரகாலம் 58” (Emergency 58) இல் இதனை விரிவாகப் பதிவு செய்துள்ளார்.

தமிழர் தாயகத்தில் – கிழக்கு மாகாணத்தில் நிறுவப்பட்ட முதலாவது பாரிய சிங்களக் குடியேற்றம் கல்லோயாக் குடியேற்றமாகும். இதனை ஆரம்பித்து வைத்தவர் இலங்கையின் முதற் பிரதமர் டி.எஸ்.சேனனாயக்க. இவர் 1931 முதல் 1947 வரை பிரித்தானிய ஆட்சிக் காலப்பகுதியில் விவசாய மற்றும் காணி அமைச்சராக பதவி வகித்தவர் ஆவார்.

தமிழர்கள் பூர்வீகமாய் வாழ்ந்து வந்த பட்டிப்பளை‚ களுவாஞ்சிக்குடி‚ மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களின் எல்லையில் உள்ள கிராமங்களை இணைத்து கல்லோயா என்று பெயரிட்டு கல்லோயா பள்ளத்தாக்கு சிங்களக் “கொலனி” 1949 இல் உருவாக்கப்பட்டது. பட்டிப்பளை என்ற புராதன தமிழ்க் கிராமத்தின் பெயரே கல்லோயா என்ற சிங்களப் பெயராக மாற்றப்பட்டு சிங்களக் குடியேற்றம் ஏற்படுத்தப்பட்டது.

இக் குடியேற்றங்களுக்காக சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களின் மூலம் வெளிநாடுகளின் நிதியுதவி பெறப்பட்டது.

தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த பிரதேசத்தில் 1949 – 1952 காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட கல்லோயாக் குடியேற்றத் திட்டத்தின் மூலம், கேகல்லை, மாத்தறை போன்ற வெளி மாவட்டங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட சுமார் 80‚000 இற்கும் மேற்பட்ட சிங்களவர்கள் குடியேற்றப்பட்டார்கள்.
1960 வரை இத்திட்டம் விஸ்திரிக்கப்பட்டது.

கல்லோயா குடியேற்றத் திட்டம் இங்கினியாகல என்ற இடத்திலிருந்து ஆரம்பமாகிறது. இங்கு ஆரம்பத்தில் சிங்களவர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய சிறுதொகையினரே வாழ்ந்து வந்தனர் .

(மகாவலிH வலய அபிவிருத்தி என்கிற போர்வையில் 1989 ஆம் ஆண்டு அரச வர்த்தமானி மூலம், அப்போதைய மகாவலி அமைச்சர் காமினி திஸாநாயக்கா அவர்களால், தண்ணிமுறிப்பு, குமுளமுனை, அளம்பில், செம்மலை போன்ற பூர்வீக கிராமங்களைவிட்டு வெளியேறுமாறு அறிவித்தல் விடப்பட்டதை போன்று)

1952 ஜுலை 13 ஆம் திகதி, குறித்த பட்டிப்பளை எனும் கிராமத்திலும் பூர்வீகமாக வாழ்ந்து வந்த 100 இற்கும் அதிகமான தமிழ்க் குடும்பங்களை, வாழ்விடங்களை விட்டு வெளியேறுமாறு இராணுவத்தினர் வற்புறுத்தி அவர்களது வீடுகளை எரித்து அழித்தனர். ஆனால் அவர்கள் குடியமர மாற்று நிலம் எதுவுமே வழங்கப்பட வில்லை.

அதே நேரம் தமிழர்களின் பூர்வீக வாழ்விடங்கள் சிங்களக் குடும்பங்களுக்கு பங்கு பிரித்து, ஒவ்வொரு குடும்பங்களிற்கும் தலா, ஐந்து ஏக்கர் நீர்ப்பாசனக் காணியும், இரண்டு ஏக்கர் குடியிருப்புக் காணியும் குடியமர வழங்கப்பட்டதுடன், ஒவ்வோரு குடும்பத்திற்கும் ரூபா 10,000 உதவித் தொகையும் வழங்கப்பட்டது. 68 வருடங்களுக்கு முன்னர் இது மிகப் பெரிய தொகையாகும் என்பதைவிட, இன்றுவரைக்கும் இலங்கைத்திருநாட்டில் வாழும் சிங்கள பெளத்த இனத்தவர்களைத் தவிர வேறு எந்த சமூகத்தினருக்கும் இவ்வாறான உதவிகள் வழங்கப்படவில்லை என்பது மிகப்பெரிய அநியாயம்.

இவைதவிர, இவ்வாறு குடியேற்றப்பட்டவர்கள் தங்கள் நீர்ப்பாசனக் காணிகளில் கரும்பு பயிற்ச செய்கை மேற்கொள்ளவும், அறுவடை செய்யப்படும் கரும்பு விளைபொருட்களை அவர்களிடமிருந்து கொள்வனவு செய்து சீனி உற்பத்தி செய்யவும், குடியேறிகளுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும்வண்ணம் அங்கே ஹிங்குரான சீனி உற்பத்திச் சாலை ஒன்றையும் அமைத்துக் கொடுத்தது சிங்கள அரசு என்பது மேலதிக தகவல்.

இதன்பின்னரும் பட்டிப்பளை மக்கள் வெளியேற மறுத்து, தங்கள் நிலம் தமக்கு வேண்டுமென வாதாடிக்கொண்டு அங்கேயே வாழ்ந்துவரும் தறுவாயில், தமிழினத்தின் மீதான சிங்கள இனவெறி அரச தீவிரவாத முதலாவது பாரிய இனப்படுகொலை, ஜுன் 5‚ 1956 அன்று சிங்கள ஆயுதப் படைகளால் அரங்கேற்றப்பட்டது.

கல்லோயத் திட்டத்தின் கீழ் குடியேற்றப்பட்ட சிங்களக் காடையினராலும் ஆயுதப் படையினராலும் (பட்டிப்பளை) இங்கினியாகலவில் பூர்வீகமாக வாழ்ந்து வந்த 150 இற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.

படுகொலை செய்யப்பட்டவர்களும் காயமடைந்தவர்களும் எரிக்கப்ட்டு தடயமின்றிச் செய்யப்பட்டார்கள். தாசி விதாச்சி தனது “அவசரகாலம் 58” (Emergency 58) இல் இதனை விரிவாகப் பதிவு செய்துள்ளார்.

கல்லோயா குடியேற்றத்தைத் தொடர்ந்து திருகோணமலை கந்தளாயில் சிங்களக் கொலனி உருவாக்கப்பட்டது. இதற்கு தமிழ் அரசியல்வாதிகளிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து, இனவிகித அடிப்படையில் இங்கு தமிழர்களுக்கும் காணி, வீடு வழங்கப்பட்டிருந்தது.

1956 இல் கொண்டுவரப்பட்ட தனிச்சிங்களச் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பில் உள்ள பழைய பாராளுமன்றக் கட்டிடத்துக்கு முன்பாகத் தமிழ்த் தலைவர்கள் சத்தியாக்கிரகம் செய்தனர். சத்தியாக்கிரகிகள் சிங்களக் காடையர்களால் தாக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து கொழும்பிலும் தமிழர்கள் வாழும் தென்னிலங்கையின் பகுதிகளிலும் மலையகப் பகுதியிலும் தமிழர்களுக்கு எதிரான கலவரங்கள் பரவின. 1956 இல் மேற்கொள்ளப்பட்ட தமிழர்களுக்கு எதிரான கலவரத்தின் முதல் இலக்காக கல்லோயா மற்றும் கந்தளாய்ப் பகுதியில் பூர்விகமாய் வாழ்ந்துவந்த மற்றும் குடியேறிய தமிழர்களும் தாக்கப்பட்டார்கள்.

இவ்வாறு இலங்கைத் தீவில் அரங்கேற்றப்பட்ட திட்டமிட்ட இமைப்படுகொலைகள் அனைத்தும், தமிழர்கள் பூர்வீகமாக வாழ்ந்துவந்த, சிறப்பான நீர்வளம், நிலவளம், காட்டுவளம், கடல்வளம் போன்ற அத்தியாவசியமான இயற்கைவளங்கள் செழிப்பாகவும், செறிந்தும் காணப்பட்டதும், எதிர்காலத்தில் தொழில்நுட்ப திட்டமிடல்கள் மூலம் இவ்வளங்களை மென்மேலும் அபிவிருத்தி செய்யக்கூடியதுமான இடங்களில்தான் என்பதும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாத ஒருபெரும் துயரமான செய்தியாகும்.

(அதன் பின்னர் 1989 ஆம் ஆண்டு JVP முட்டாள் கம்முனிஸ்ட்டுகளால் குறித்த குடியேற்றவாசிகளைக் மடைமாற்றி முன்னெடுக்கப்பட்ட தொழிலாளர் கிளர்ச்சிமூலம், வெற்றிகரமாக இயங்கிவந்த ஹிங்குரான சீனி ஆலையும், கந்தளாய் சீனி ஆலையும் இழுத்து மூடப்பட்டதும், சிங்களக் குடியேற்றவாசிகளின் கரும்பு விவசாயத்தில் இடிவிழுந்து போனதும், மக்கள் பஞ்சம் பசி பட்டினியால் தெருத்தெருவாக நாட்கூலிகளாக அலைந்து திரிந்ததும், அதன்பின்னர் இன்றுவரைக்கும் கியூபாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெள்ளை பீற்றூட் (கொடிய நஞ்சு) சீனியே இலங்கை சந்தையில் ஆளுமை செய்வதும், 2009 முள்ளிவாய்க்கால் அவலத்தின் பின்னர், காட்டிக்கொடுப்பிற்கு பிரதியுபகாரமாக கருணா-முரளிதரன் அவர்களே குறித்த சீனி இறக்குமதி முகவராக, மகிந்த ராசபக்சவினால் நியமிக்கப்பட்டிருப்பதும் வேறு கதை)

இந்தமண் எங்களின் சொந்த மண்
நீர்வளம் உண்டு நிலவளம் உண்டு
நிம்மதி ஒன்றுதான் இல்லை

“யாரோடு நோவேன் யார்க்கெடுத் துரைப்பேன்
ஆண்டநீர் அறிதில யானால்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here