மரபுவழி தாயகக் கோட்பாட்டை சிதைத்து தமிழ் தேசிய இனத்தை சிறுபாண்மை என்ற பதத்திற்குள் புதைத்துவிட்டு அவர்களின் சுயநிர்ணய உரிமையை அழித்துவிட துடிக்கும் சிங்கள பெளத்த பேரினவாத கொடிய முகங்களில் பெளதீக உடல் சார்ந்த மாற்றங்கள் காணப்பட்டனவே அன்றி அவற்றின் சிங்கள பெளத்த பேரினவாத கோட்பாட்டில் எந்தவிதமான மாற்றங்களையும் இன்றுவரை காண முடியவில்லை.

சிங்கள தேசத்தினை சார்ந்து அண்டிப்பிழைக்கும் அரசியல் தலைமைகள் கூறுகிறார்கள் தாம் உடன்படிக்கை எதுவும் புரியாத போதும் இதயத்தால் புரிந்து கொண்டோம் என இவ்வாறான தமிழ் தலைமைகள் தமது எசமானர்கள் ஆட்டுவிக்கின்ற பொம்மைகள் தமிழர் பிரதிநிதிகளாக எவர் தெரிவு செய்யப்பட வேண்டும்.

எவர் இருக்க வேண்டும் என சிங்களம் விரும்புகிறதோ அவர்கள் ஊடாக பிராந்தியம் மற்றும் சக்திகள் விரும்புகின்றனவோ அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் இது எல்லாக் காலங்களிலும் இடம்பெற்றது சிங்களத்தின் செல்லப்பிள்ளைகளின் இருப்பே திட்டமிட்ட நிலப்பறிப்பை இனவழிப்பை மடைமாற்றி மக்கள் அறியாவண்ணம் அபிவிருத்தி மாயைக்குள் புதைக்க வழியாகும் என்பதை சிங்களம் நன்கறியும்.

எனவே தமிழர் தேசத்தின் மீது அவதானம் செலுத்துகின்ற தேச மக்கள் நிலப்பறிப்புக்கு எதிராக குரல் தரவல்ல தமது தலைமைகளை தம்மால் இருந்து தெரிந்தெடுக்க வேண்டும் முள்ளிவாய்கால் மட்டுமே போர் கிடையாது இப்போது நடைபெறுவதும் போர்தான் அந்த எல்லாப் போர்களும் நிலப்பறிப்புப் பற்றியதுதான்.

மாதுறு ஓயா இல் (சிங்கள) மக்களை குடியமர்த்துவதன் மூலம் மட்டக்களப்பு வலையத்தைத் தனிநாட்டுக்கு எதிரான ஆட்களால் நிரப்புவதுதான் எமது திட்டம்” இவ்வாறு மகாவலி அமைச்சின் சிங்கள அதிகாரியான ஹேர்மன் குணரத்தின சிறீலங்கா சண்டே ரைம்ஸ் செய்தித்தாளில் (ஓகஸ்ட் 26,1990 இல்) எழுதியிருந்தார்.

சிங்கள – பவுத்த அரசுகள் சிங்களக் குடியேற்றங்களை எப்படியெல்லாம் சிந்தித்துச் செயற்படுத்துகிறது என்பதை ஹேமன் குணரத்தினாவின் ஒப்புதல் வாக்கு மூலம் வழியாக நாம் அறிந்து கொள்ளலாம். ஹேமன் குணரத்தினாவைப் போல் எத்தனை பேர் வெளியில் சொல்லாமல் பூடகமாகச் செயல்படுகிறார்கள் என்பதையும் நாம் ஊகித்துக் கொள்ளலாம்.

மேலும் அவர் கூறுகையில் 1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற இனக் கலவரத்துக்கு முன்பதாகவே யான் ஓயா மற்றும் மல்வத்து ஓயா நீர்த்தேக்கங்களில் (சிங்கள) மக்களைக் குடியேற்றும் திட்டத்தைத் தயாரித்துவிட்டோம். உண்மையில் இந்தத் திட்டத்தை வடிவமைத்தவர்கள் மகாவலி அமைச்சில் பணிபுரிந்த, அவர்களில் பலர் பன்னாட்டு நிறுவனங்களில் உயர் பதவிகளில் இருப்பவர்கள், கூரிய மூளைசாலிகள் ஆவர். எனது பங்கு நிறைவேற்றாளர் என்ற பாத்திரத்தை வகித்ததே ………….என்கிறார்

நாங்கள் இந்தத் திட்டத்தைக் கருத்தரித்து அதனை நடைமுறைப்படுவதன் மூலம் நீண்ட காலத்துக்கு சிறீலங்காவின் ஆட்புலக் கட்டுறுதியைப் பத்திரப்படுத்தலாம் என நினைத்தோம். நாங்கள் மாதுறு ஓயாப் படுக்கையின் மட்டக்களப்பு மற்றும் பொலநறுவ மாவட்டங்களுக்கு காணிக்குத் தவண்டை அடித்துக் கொண்டிருந்த 45,000 சிறு விவசாயிகளை நகர்த்தினோம். இரண்டாவது கட்டமாக யான் ஓயா படுக்கையில் இதே மாதிரி குடியேற்றத்தை மேற்கொள்வது எனத் திட்டமிட்டோம். மூன்றாவது கட்டம் மல்வத்து ஓயாவின் கரையோரம் ஈழத்துக்கு எதிரான மக்களைக் குடியமர்த்துவது எமது திட்டம் ஆகும் என்கிறார்

மாதுறு ஓயா இல் (சிங்கள) மக்களைக் குடியமர்த்துவதன் மூலம் மட்டக்களப்பு வலையத்தை தனிநாட்டுக்கு எதிரான ஆட்களால் நிரப்புவதுதான் எமது திட்டம்……..யான் ஓயா இல் தனிநாட்டுக்கு எதிரானவர்களைக் கொண்டு நிரப்பினால் குடிமக்கள் தொகை மேலும் 50,000 ஆக உயர்ந்துவிடும். அதன் மூலம் திருகோணமலையைக் கிளர்ச்சியாளர்களிடம் இருந்து முற்றாகக் கைப்பற்றிவிடலாம்……”என தொடர்ந்து கூறுகிறார்

சிங்கள பெளத்த பேரினவாதம் தமது சனநாயக அரசு என்ற முகமூடியை சர்வதேசத்திற்கு போலியாக அடையாளப்படுத்திக் கொண்டு ஒரு தேசிய இனத்திற்கு இனவழிப்பினை அன்று தொடக்கம் இன்றுவரை ஆற்றி வருகின்றது அதற்கு எதிராக தமிழர்களின் அரசியலில் சர்வதேச நீதிக்கட்டமைப்பின் ஊடாக நீதியை பெற்றுக் கொள்வதில் சாதகமான நிலைமை ஏற்பட்டுள்ளது.

அவற்றினையும் நீர்த்துப் போகச் செய்து விடவே தமிழ் அரசியல் பரப்பில் பல போலித் தமிழ் தேசியத்தை வைத்து எமது தேசியத்தை பகைப்புலம் சிரிக்கிறது இவ்வாறான சூழலில் நாம் தெளிவான பார்வையோடு இக்களத்தில் போராட வேண்டியது நம் ஒவ்வொருவரினதும் தேசிய கடமையாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here