Archive for the ‘செய்திகள்’ Category

1990ம் ஆண்டு கலைஞர் கருணாநிதியால் ஆரம்பிக்கப்பட்ட சிறப்புமுகாம் என்னும் சித்திரவதைமுகாம் இன்னும் மூடப்படவில்லை.   ஆரம்பித்து வைத்த கலைஞர்கூட இறந்துவிட்டார். ஆனால் அவரால் ஆரம்பிக்கப்பட்ட சிறப்புமுகாம் இன்னும் மூடப்படவில்லை.   கடந்த 28 வருடங்களாக இந்தியாவில் ஈழ அகதிகளை மட்டும் சிறப்புமுகாமில் அடைத்து வைத்து சித்திரவதை செய்யப்பட்டு வருகிறது.   தற்போது திருச்சியில் இச் சிறப்புமுகாம் இயங்கி வருகிறது. அதில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் தங்களை விடுதலை செய்யுமாறு கோரி   [ மேலும் படிக்க ]

கடல் ஆதிக்கத்தின் விரிவாக்கமே தற்போது உலகின் மிகப்பெரும் அரசியல் நெருக்கடிக்கான காரணியாக உருமாற்றம் பெற்றுவருகின்றது. உக்கிரேனுக்கும் ரஸ்யாவுக்கும் இடையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைக்கும் கடல் சார் ஆதிக்கப்போட்டியே காரணம்.   2014 ஆம் ஆண்டு உக்கிரேனின் கிரைமியா பகுதியை தனதாக்கிக் கொண்ட ரஸ்யா தற்போது கருங்கடல் பகுதியில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள உக்கிரேனின் கடற்படையின் 3 சுற்றுக்காவல் கப்பல்களையும் 25 கடற்படையினரையும் சிறைப்பிடித்துள்ளது.   நேட்டோ படைக்கும், மேற்குலகத்திற்கும் விடுக்கப்படும்   [ மேலும் படிக்க ]

இந்திய உளவுத்துறையின் அனுசரணையுடன் தமிழகத்தில் முன்னனி நடகர்களாக கொண்டுவரப்பட்ட வேற்று மாநில நடிகர்களில் ஒருவரான ரஜனிகாந்தின் 2.0 திரைப்படம் நாளை வெளிவருகின்றது.   யார் இந்த ரஜனிகாந்?   தமிழர்களின் வரலாறு தெரியாது, கன்னடத்தையே தனது மூச்சாகக் கொண்டு தமிழகத்தை ஆட்சி புரிய ஆவலாக உள்ள ஒரு இந்திய வியாபாரி.   தூத்துக்குடியில் உள்ள நட்சு ஆலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டியும், அந்த ஆலை உருவாக்கும் நட்சுப் பொருட்களில்   [ மேலும் படிக்க ]

விடுதலைப்புலிகளின் ஆயுதப்போர் மௌனிக்கப்பட்ட நிலையில் தமிழ் மக்களின் விடுதலை உணர்வை முற்றாக மழுங்கடித்து விடுதலைப்புலிகளின் தியாகத்தை மக்களின் மனங்களில் இருந்து அகற்றிவிடலாம் என்பது எதிரிகளின் கணிப்பீடாக இருந்தது, சில வருடங்களில் தமிழ் மக்கள் தமது போராட்டத்தையும், விடுதலை வீரர்களையும் மறந்துவிடுவார்கள் என்பது சிங்கள இந்திய கூட்டுச் சதியின் கணிப்பு.   ஆனால் 2009 ஆம் ஆண்டுக்கு பின்னரான ஒவ்வொரு வருடமும் மெல்ல மெல்ல எழுச்சி பெற்ற எமது மாவீரர்களின் நினைவு   [ மேலும் படிக்க ]

தமிழினம் தனது தலைவரின் பிறந்த தினத்தை மிகவும் உணர்வு பூர்வமாக உலகம் எங்கும் கொண்டாடி வருகின்றது. யாரும் யாரையும் நிர்ப்பந்திக்கவில்லை, யாரும் இலவசங்கள் வழங்கவில்லை ஆனாலும் தமக்குள் இருந்து எழும் தமிழ் இன உணர்வின் வெளிப்பாடாக இன்று தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் வயது வேறுபாடின்றி தம் தலைவனை கொண்டாடுகின்றனர்.   தலைவரின் புகைப்படத்தை கைகளில் ஏந்துவதில் பெருமை கொள்கின்றனர். யாரை பயங்கரவாதி என சிங்கள தேசமும், இந்தியாவும், மேற்குலகமும் முத்திரை   [ மேலும் படிக்க ]

லைக்கா நிறுவன முதலாளி சுபாஸ்கரன் அவர்கள் புயல் நிவாரண நிதியாக ஒரு கோடி ரூபா கொடுத்துள்ளார் என்று முகநூலில் செய்தி பகிர்கிறார்கள்.   உண்மையில் அவர் இந்த பணத்தை பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் மீது அக்கறையில் கொடுக்கவில்லை.   மாறாக ரஜனியை வைத்து தான் எடுக்கும் படத்தின் இன்னொரு முதலீடாகவே இதனை செய்துள்ளார்.   அவர் ரஜனியை வைத்து 2.0 படத்தை 500 கோடி ரூபா செலவில் எடுத்து வருகிறார்.     [ மேலும் படிக்க ]

தமிழகத்தின் உறவுகள் தற்போது மிகப்பெரும் அவலத்தை சந்தித்துள்ளனர். கஜா புயலின் தாக்கத்தினால் தமிழ் மக்கள் உயிரிழப்புக்களை சந்தித்துள்ளதுடன், மிகப்பெரும் பொருளாதார இழப்புக்களையும் சந்தித்துள்ளனர்.   தமிழ் மக்கள் சந்தித்த இந்த போரிழப்பு குறித்து இந்திய மத்திய அரசோ அல்லது இந்திய மற்றும் தமிழக ஊடகங்களோ அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை எனவும், அதனை உலகறியச் செய்வதற்குரிய தமது கடமைகளில் இருந்து அவர்கள் தவறியுள்ளதாகவும் குற்றச்சாட்டுக்கள் உள்ளன.   அவை உண்மையும் கூட,   [ மேலும் படிக்க ]

தாயக விடுதலைப்போரில் தங்களுடைய இன்னுயிர்களை ஈந்து வித்தாகிப்போன மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் நிகழ்வு டென்மார்க் பல்கலைகழக தமிழ் மாணவர்களால் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.   முதல் நிகழ்வாக பொதுச்சுடர், ஏற்றலுடன் தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடியெற்றல், அதனையடுத்து ஈகச்சுடரேற்றல் நிகழ்வும் இடம்பெற்றது, அகவணக்கத்தைத் தொடர்ந்து துயிலுமில்லப்பாடல் ஒலித்தது. மண்டபத்தில் நிறைந்திருந்த அனைவரினதும் கைகளில் தீபங்கள் எரிந்து கொண்டிருக்க அப்பாடல் முழுவதும் உணர்வுமயமாக மாணவர்கள் ஒன்றித்திருந்தனர்.   அதைத் தொடர்ந்து மணவர்களால் மலர்வணக்கம் மிகவும்   [ மேலும் படிக்க ]

27 வருடங்களுக்கு மேலாக சிறையில் வாடிவரும் அப்பாவித் தமிழ் கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்வதற்கு நீதிக்குப் புறம்பாக தமது செயற்பாடுகளை மேற்கொண்டுவரும் இந்திய அரசும், அதன் நீதித்துறையும், தற்போது தமிழ் மக்களின் கருத்துச் சுதந்திரம் மற்றும் பேச்சு சுதந்திரத்தையும் முற்றாக முடக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றது.   இந்திய சிறீலங்கா அரசுகள் மேற்கொண்ட தமிழ் இன அழிப்பு தொடர்பான தகவல்களையும்;, அதற்கு எதிராக தமிழ் மக்கள் மேற்கொண்ட விடுதலைப்போரையும் ஆதாரமாகக்   [ மேலும் படிக்க ]

அனைத்துலக பூகோள அரசியல் வலைக்குள் சிக்கிய சிங்கங்கள் தமக்குள் மோதலை ஆரம்பித்துவிட்டன. சிங்களச் சிப்பாய்களின் அணிவகுப்பின் போது சிப்பாய் ஒருவர் தனது துப்பாக்கியால் முன்னாள் இந்திய பிரதமரான காலம் சென்ற ராஜுவ் காந்தியை தாக்கிய போது அமைதி காத்த இந்திய தேசம் தற்போது சிறீலங்கா அரச தலைவரை கொல்ல துணிந்து நிற்கின்றது.   சிங்கள தேசம் தமிழினப் படுகொலையை மேற்கொண்ட போது அவர்களை மயில் இறகால் தடவிக் கொடுத்து செல்லமாக   [ மேலும் படிக்க ]