maha-prabaதமிழகத்திலிருந்து சென்ற வார இதழ் ஒன்றின் செய்தியாளர் கிளிநொச்சியில் வைத்து படையினரால் கைது செய்யப்படடுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கிராஞ்சி என்ற இடத்திலேயே இவ்வாறு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் மிக பின்தங்கியிருக்கும் வேரவில் கிராஞ்சி பகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், மாகாணசபை உறுப்பினர், பிரதேசசபை உறுப்பினர்கள் ஆகியோர் தம்முடன் குறித்த தமிழக பத்திரிகையாளரையும் அழைத்துச் சென்றுள்ளனர்.செல்லும் வழியில் சேதமடைந்து குன்றும் குழியுமாக இருந்த வீதியின் மோசமான நிலையினை அவர் புகைப்படம் எடுத்துள்ளார். இதனை படையினர் அவதானித்துள்ளனர்.

இதனையடுத்து, அவர்கள் கிராமத்திற்குச் சென்று மக்களோடு உரையாடிக் கொண்டிருக்கையில் அங்கு சென்ற படையினர், பத்திரிகையாளரான தமிழக பிரஜையை கைது செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. மகா தமிழ் பிரபாகரன் எனப்படும் அந்தச் செய்தியாளர் கடந்த வருடமும் இலங்கை சென்று இலங்கையின் நிலவரங்களை அவர் பணியாற்றும் பிரபல இதழில் எழுதியிருந்தார்.

கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர் இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டு காவற்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். அத்துடன் இந்தப் பத்திரிகையாளருடன் நின்றிருந்த பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன், மற்றும் அவரது ஆதரவாளர்கள் மாகாண சபை உறுப்பினர்கள் காவற்துறை நிலையம் சென்றனர் ஆயினும் அவர்களின் புகைப்படக் கருவிகள் பரிசோதித்த பின் அவை ஒப்படைக்கப்பட்டன.

கைது செய்யப்பட்ட இந்தியப் பிரஜை விடுவிக்கப்படாது தொடர்ந்தும் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுளார். அவர் நாளை கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார் என தெரிவிக்கப்டப்டுள்ளது.

<- வல்வை அகலினியன்
அவசர வேண்டுகோள் :

நாளை காலையில் தோழர். தமிழ் மகா பிரபாகரன் கைது தொடர்பாகவும், அவரது பாதுகாப்பு, விடுதலை , தாயகம் அழைத்தல் தொடர்பாக தமிழக அரசின் தலைமை செயலாளரை சந்தித்து பேச அனைத்து இயக்க-கட்சி தோழர்களையும், பத்திரிக்கையாளர் , வழக்கறிஞர் நண்பர்களையும் அழைக்கிறோம். இரவு நெடுநேரம் ஆகிய காரணத்தினால் பலரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள இயலவில்லை… தலைவர்களையும், இதர தோழர்களையும் காலையில் தான் தொடர்பு கொள்ளமுடியும் என நினைக்கிறோம்.

இத்தகவல் தெரிந்த தோழர்கள் தங்களது சக அமைப்புகளுடனோ, தலைவர்களுடனோ பேசி ஒரு குழுவாக சென்று சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். நாங்களும் இதே முயற்சியை மேற்கொள்ள முயலுகிறோம். நாம் அனைவரும் இணைந்து இயக்க-கட்சி வேறுபாடு மறந்து ஒன்றாக தோழர். தமிழ் மகா பிரபாகரனை மீட்க முயற்சி எடுப்போம்.

வாய்ப்புள்ள தோழர்கள் கட்சி தலைவர்களை தொடர்பு கொண்டு இம்முயற்சியை முன்னெடுக்க வேண்டுகிறோம். தலைநகரில் இருக்கும் மூத்த தலைவர்கள் யாரேனும் நாளை வரும் பட்சத்தில், அவரது தலைமையில் சென்று தலைமைச் செயலாளரை அலுவலகத்தில் சந்தித்து பேச முயற்சிக்கலாம். காலத்தின் அருமை கருதி தோழர்கள் இம்முயற்சியையோ அல்லது இதைவிட சிறப்பான முயற்சி ஒன்றினையோ நாளை நடத்த முன்வரும்பட்சத்தில் மிக பயனுள்ளதாக அமையும். இன்று இரவு சிங்கள ராணுவத்தின் பிடியில் இருக்கும் நம் தோழனுக்காக குரல் கொடுப்போம் தோழர்களே.

நாளை காலை 10:30- 11:00 மணியளவில் பத்திரிக்கையாளர் சங்கத்தில் (அதன் அருகே) சந்தித்து பேசி முடிவெடுத்து செல்லலாம் என்று யோசனை முன்வைக்கப்பட்டிருக்கிறது. பத்திரிக்கையாளர் தோழர்கள் இந்த ஒருங்கிணைப்பு முயற்சிக்கு துணை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மே பதினேழு இயக்கம்.

Comments are closed.