1986 ஆனி மாதம் 6 ஆம் நாள் வங்காலை கத்தோலிக்க ஆலயத்தில் மேற்கொள்ளப்பட்ட படுகொலை.   1987 வைகாசி 29 ஆம் நாள் அல்வாய் இந்து ஆலயம் மீதான சிறீலங்கா இராணுவத்தின் எறிகணைத் தாக்குதல்.   1992 வைகாசி 30 ஆம் நாள் பிரசித்தி பெற்ற தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயம் மீதான எறிகணைத் தாக்குதல்.   1993 புரட்டாசி 29 ஆம் நாள் கொக்குவில் ஆலயம் மீதான குண்டுத்தாக்குதலும்   [ மேலும் படிக்க ]

சிறீலங்கா தலைநகர் கொழும்பிலும் கிழக்கு மாகாணமான மட்டக்களப்பிலும் மற்றும் கொழும்பைச் சுற்றியுள்ள பிரதேசங்களிலும் நேற்று (21) மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 300 ஐ தாண்டியுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.   கொல்லப்பட்டவர்களில் 50 வெளிநாட்டவர்கள், 98 சிங்கள இனத்தவர் மற்றும் 150 தமிழ் மக்கள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.   காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 600 இற்கும் மேல் எனவும் அதில் பலரின் நிலமை கவலைக்கிடமானது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.   சிறீலங்கா   [ மேலும் படிக்க ]

சிறீலங்காவின் தலைநகர் கொழும்பு உட்பட 6 இடங்களில் ஏற்பட்ட பாரிய குண்டு வெடிப்புக்களினால் பெருமளவான மக்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.   கொழும்பில் பிரசித்திபெற்ற கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயம், மட்டக்களப்பு புளியந்தீவு மரியாள் பேராலயம் மற்றும் நீர்கொழும்பு புனித செபஸ்ரியர் ஆலயம் ஆகிய இடங்களிலேயே குணடுகள் வெடித்துள்ளன. இதில் பலர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 80 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயமடைதுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.   இதனிடையே 11   [ மேலும் படிக்க ]

அன்னை பூபதி அவர்களின் 31வது நினைதினம் இன்று நினைவுகூரப்பட்டது!   அன்னை பூபதி அவர்களின் 31 வது ஆண்டு நினைவு நாள் மட்டக்களப்பு மாவட்ட நினைவேந்தல் குழுவினரின் ஒழுங்கு படுத்தலில் மட்டக்களப்பு கல்லடி நாவலடியில் அமைந்துள்ள அன்னை பூபதி அவர்களின் நினைவுத் தூபியில் மலர்மாலை அணிவித்து இன்று நினைவுகூரப்பட்டது.   இந் நிகழ்வுவில் அப்பகுதி மக்களும்,கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களும் கலந்துகொண்டு அன்னை பூபதி அவர்களுக்கு தமது அஞ்சலியை செலுத்தினர்…..     [ மேலும் படிக்க ]

சித்திரை முழுநிலவு நாளில் உறுதியேற்போம்!   தமிழ்நாட்டின் முல்லைப்பெரியாறு ஆற்றுநீர் உரிமையை பறிக்கும் மலையாளிகளின் அரம்பத்தனத்தை அனைத்துத் தமிழரும் அறிவோம். ஆனால் தமிழர்களுக்குச் சொந்தமான கண்ணகி கோயிலை அபகரிக்க முயலும் மலையாளிகளின் சூழ்ச்சியை தமிழர்கள் இதுவரை அறியாதவர்களாகவே உள்ளனர்.   ஒவ்வொரு ஆண்டும் சித்திரை முழு நிலவு நாளன்று தேனி மாவட்டம் கூடலூர் மலையில் உள்ள கண்ணகி கோயிலுக்குச் சென்று தமிழர்கள் வழிபடுவது வழக்கம். அங்கு கேரள அரசின் கெடுபிடி   [ மேலும் படிக்க ]

ஒருமாத காலம் எப்படிக் கடந்தோம் என அறியாமல் கடந்திருக்கிறோம்… தேதி கிழமைகள் கூட தெரியாமல் அலைந்திருக்கிறோம்!!   எம் இனமும் கட்சியும் எங்களுக்கு கொடுத்த பணியை எங்களின் முழு பலத்தையும் திரட்டி மனப்பூர்வமாக செய்து முடித்திருக்கிறோம்.   கொளுத்தும் வெய்யிலில் தினந்தோறும் துண்டறிக்கைகளோடு வீடு வீடாய் நடந்த உறவுகளும், கடும் பொருளாதார நெருக்கடிகளை தங்கள் பங்களிப்பின் மூலம் தகர்த்தவர்களும், வாகனத்தில் அலைந்தோறும், மேடையில் முழங்கினோரும், குழந்தைகளை கைகளில் வைத்துக் கொண்டு   [ மேலும் படிக்க ]

கும்மிடிப்பூண்டியை அடுத்த நாகராஜ கண்டிகை கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு, ஓட்டு போட பொதுமக்கள் செல்லவில்லை. பொதுமக்கள், ஒட்டுமொத்தமாக தேர்தலைப் புறக்கணித்ததால் பூத் வெறிச்சோடி காணப்பட்டது.   திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த நாகராஜ கண்டிகை கிராமத்தில், சில மாதங்களுக்கு முன்பு மூடப்பட்ட இரும்புத் தாது உருக்கு தொழிற்சாலை திறக்கப்பட்டது. அதற்கு, ஒட்டுமொத்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். போராட்டகளையும் நடத்தினர். ஆனால் ஆலை மூடப்படவில்லை. இதனால், வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றினர்.   [ மேலும் படிக்க ]

ஈழத்தமிழ் மக்களின் போராட்டத்தின் பின்னனியில் மாணவர்களின் பங்களிப்புகள் எப்போதும் இருந்ததுண்டு. பொன் சிவகுமாரன் தொடக்கம், 1980 களில் பெரும் வளர்ச்சி கண்ட விடுதலைப்புலிகளின் மாணவர் அமைப்பு வரையிலும் தமிழ் மாணவர்களும் தமிழ் மக்களின் விடுதலைப்போரும் பின்னிப் பிணைந்துள்ளதாகவே காணப்படுகின்றது.   தமிழ் மாணவர் சமூகம் என்பது எமது விடுதலைப்போரை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லவுள்ள அடுத்த தலைமுறைகளை தொடர்ந்து பிரசவிக்கும் ஒரு தளமாகும். எனவே தான் சிறீலங்கா அரசும் அதன் புலனாய்வுத்துறையினரும்,   [ மேலும் படிக்க ]

கடந்த மாதம் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை முறியடிப்பதற்கான முயற்சிகளை சிறீலங்கா அரசு மேற்கொள்ளவில்லை. ஏனெனில் தம் மீது அழுத்தங்கள் கொண்டுவரப்படமாட்டாது என்பது அவர்களுக்குத் தெரியும். அதற்கான காரணம் தமிழ் மக்களின் இனவிடுதலை தற்போது மேற்குலகத்தின் நலன்சார் அரசியலுக்குள் சிக்கியுள்ளது. போர் நிறைவடைந்த பின்னர் ஜெனீவாவில் இடம்பெற்ற சம்பவங்களின் ஒரு சில பகுதிகளை ஆய்வு செய்வதன் மூலம் அதனை நாம் தெரிந்துகொள்ளலாம்.   போர்   [ மேலும் படிக்க ]

இந்தியத் தேர்தலுக்கான முன்னதாக, டிரம்ப்பிக்கான தமிழர்களின் பேச்சாளர் இந்தியாவில் தமிழ் மக்களுக்கு குறிப்பாக தமிழகத்தில், தமிழ் மக்களுக்கு சார்பாக பின்வரும் செய்தியை தெரிவிக்கின்றனர்.   சோனியாவின் காங்கிரஸ், ஸ்ரீலங்கா இனப் போரின்போது, தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தத்தை வெல்வதற்கு சிங்கள மக்களுக்கு உதவுவதில் பிரதான பங்களிப்பு செய்ததோடு சிங்கள மக்களால் 145,000 க்கும் அதிகமான தமிழர்களை படுகொலை செய்ய உதவியது.   சோனியாவின் இந்தியா சிங்கள மக்களுக்கு அதிகாரம் வழங்கி,   [ மேலும் படிக்க ]

அண்மைக்காலமாக யாழ் பல்கலைக்கழக விவகாரங்களை உண்மைக்குப்புறம்பான செய்தியாக வெளியிடும் ஒரு சில ஊடகங்களின்  பின்னணியில் அரசியல் காழ்ப்புணர்வுகளே இருப்பதாக தெளிவாக அறிய முடிகின்றது . சில அரசியல் கடசிகளையும் அரசியல் புலப்பெயர் தமிழர் அமைப்புகளையும் பின்புலமாக கொண்ட குறித்த ஊடகங்கள் ஊடகவிழுமியங்களையும் மீறி மிகவும் அருவருக்கத்தக்க வகையில் முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டு வருகின்றன.   யாழ்பல்கலை கழக மாணவர்களை தமது அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குள் அடிபணிய வைக்க   [ மேலும் படிக்க ]

அன்புத் தம்பிகளே! ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி. பொன்னம்பலத்தைவிட்டு விலகி சமஷ்டியை வலியுறுத்தி அந்தக் கோரிக்கையை முன்னெடுத்துச் செல்வதற்காகவே நான் இலங்கை தமிழரசுக் கட்சியை துவக்கினேன். இன்று எனது பெயரை வைத்துக்கொண்டு நான் உருவாக்கிய கட்சியைப் பயன்படுத்தி, எனது கொள்கையை மீறி ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிப்பதுடன், அதன் அரசாங்கத்தை என்ன விலைகொடுத்தும் காக்கத் துணிகிறீர்களே அப்படி நான் உங்களுக்கு என்ன பாவம் செய்தேன்?   எனது   [ மேலும் படிக்க ]

ஊடகவியலாளர் Aaron Berhane தனது மூன்று சொந்தச் சகோதரர்களை எரித்திரிய விடுதலைப் போரில் இழந்திருக்கின்றார். அவரது மனைவி நான்கு சகோதரர்களை இழந்திருக்கின்றார். Aaron Berhane கூட்டத்தில் உரைத்ததை முடிந்தளவு சொல்ல முனைகின்றேன்.   1890ஆம் ஆண்டுகளில் எரித்திரியாவை இத்தாலி கைப்பற்றிக் கொண்டது. 50 வருடங்கள் இத்தாலியின் எரித்திரியா மீதான காலனித்துவ ஆட்சி தொடர்கிறது. இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவில் இத்தாலி தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து பிரிட்டன் 12 ஆண்டு காலம் தனது   [ மேலும் படிக்க ]

பூமியில் இருந்து 186 மைல்கள் (274 கி.மீ) தொலைவில் மணிக்கு 17000 மைல் வேகத்தில் பூமியின் கீழ்வட்டப்பாதையில் சுற்றிக்கொண்டிருந்த மைக்ரோசற்- ஆர் என்ற தனது செயற்கைக்கோளை இந்தியா கடந்த புதன்கிழமை சுட்டுவீழ்த்தியுள்ளது.   900 மில்லியன் வாக்காளர்களைக் கொண்ட இந்திய தேசத்தில் இன்னும் இரண்டு வாரங்களில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த நடவடிக்கையை இந்திய அரசு மேற்கொண்டது தொடர்பில் பல வாதப்பிரதிவாதங்கள் எழுந்துள்ளன.   அமெரிக்க மற்றும் ரஸ்யா ஆகிய   [ மேலும் படிக்க ]

பெரும்பாலான தமிழ் மருத்துவர்கள் தங்களது கல்வியை முடித்துவிட்டு தங்களுடைய  சொந்த பிரதேசங்களில் பணியாற்ற வருவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ச்சியாக தமிழ் மக்களிடம் இருந்து வருகிறது. அந்தந்த மாவட்டங்களின் வெட்டுப்புள்ளி, மக்களின் வரிப்பணம் என்பவற்றில் கல்வி  கற்றுவிட்டு எங்கோ பறந்து விடுகின்றனர். இந்த நிலையில்தான் மருத்துவர் மனோஜ் சோமரத்தன கவனம்பெறுகின்றார்.   இலங்கை சுகாதாரத்துறையின் முக்கியபொறுப்பில் உள்ள தமிழ்பேசும் உயர் அலுவலர் ஒருவரால் ‘வில்லங்கமான’ஒரு அறிவுரை மருத்துவர் மனோஜ் சோமரத்தனவுக்கு வழங்கப்பட்டது.   [ மேலும் படிக்க ]